சனி, 16 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டையில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்

62-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படடடது. காலை 9 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றினார். அனைத்துப் பள்ளிகூடங்களிலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக் நடைபெற்றது.


கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பாக அதன் நடைபெற்ற விழாவிலும் அதனை தொடர்ந்து அரிமா சங்கம் (Lions Club) சார்பில் மீராப்பள்ளி அருகிலும் சட்டமன்ற உறுப்பினர் திருமதி செல்வி ராமஜெயம் பங்கு கொண்டு இந்திய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்கிற கருத்தை மையமாக கொண்டு சிறப்பு கண்காட்சி மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய தகவல் துணுக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பயனுள்ள தகவல் தரும் விசயமாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்புக் சொற்பொழிவும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சின்னக் கடைமுனையில் ஜமாஅத்துல் உலமா சார்பில் சுதந்திர சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியன் பள்ளி முதல்வர் பாண்டியன் கரந்துக்கொண்டார். இவ்விழாவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது.

5 கருத்துகள்:

  1. இந்திய விடுதலை விருட்சம் தனது 61-ஆம் அகவை நிறைவு செய்து 15.08.2008ல் தன் 62ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. எனவே, இப்பதிவின் தொடக்கத்தைத் திருத்துக.

    விடுதலை நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. என்ன பக்ருத்தீன், குத்பா பேருரையில் மீராப்பள்ளி இமாம் இந்திய விடுதலையில் முஸ்லீம்களின் பங்கு என்ற தலைப்பில் நல்ல ஆதாரங்களுடன் முதல் முறையாக ஆணித்தரமாக பேசினாரே மறந்து விட்டீர்களா? பேசிய இமாமிற்கும், அனுமதித்த நிர்வாகத்திற்கும் நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பரங்கிப்பேட்டையின் முதல் வார்டான ஜெயின்பவா தெரு கடன்த 25 நாட்கலாக கேப்பார் அட்ரு தெரு குப்பைகள் அகட்ரபடமல் துர்நற்றம் வீசி வருகின்றது இதனால் தெருக்கலில் கொசுகல் புலுத்து விட்டன கொசு தொல்லையால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
    இதனால் நொய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ள்து.
    இது பற்றி பலமுறை தலைவரிடம் புகார் செய்யப்பட்டு விட்டது. பலன் ஏதும் இல்லை.
    இப்படிக்கு இசுப்.

    பதிலளிநீக்கு
  4. Assalamu alaikum,

    I have been to PP only once in the last few years. And I have to say that PP people have a knowledgeable imam in Maulana Abdullah.

    I found mixing with him good for my iman. I started keeping beard after my meeting with him. He has been a positive influence on me alhamdulillah. Maulana Abdullah is humble, masha allah. I do not have much opportunity to benefit from him as i am no longer in pp. May Allah grant pp people the opportunity and guidance to benefit from his knowledge.

    It is not about speaking loud. It is about speaking with facts.


    May Allah widen the knowledge of Maulana Abdullah and grant him Jannah.Ameen.

    Wassalam
    A brother in islam

    பதிலளிநீக்கு
  5. பிழை சரிசெய்யப்பட்டு விட்டது. நன்றி இப்னு ஹம்துன் அவர்களே!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...