பரங்கிப்பேட்டை அருகே முதியோர் இல்லம் திறப்பு
பரங்கிப்பேட்டை அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முதியோர் இல்லத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு திறந்து வைத்தார். சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் உத்திரபிரதேச எம்.பி.,க்கள் சைலந்திர குமார், ராம்கோபால் வர்மா, பிரிஜ்பூஷன் சரன்சிங் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதி உதவியுடன் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் முதியோர் இல்லம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் ராஜேந்திர ரத்னு இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது: இக்கட்டடத்திற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முதியோர் இல்லத்தினை கிரீடு தொண்டு நிறுவனம் நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. இங்கு 25 முதியோர்கள் தங்க உள்ளனர். இதன் பராமரிப்பிற்குரிய உதவிகள் மத்திய அரசின் மூலம் பெற்றுத் தரப்படும். முதியோர் தங்கள் பொழுதுபோக்கிற்காக காய்கறி தோட்டம், பூந்தோட்டம் அமைத்து அதன் பயன்களை பெற வேண்டும். அடுத்தாண்டு இந்த இல்லத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என்றார்.
முன்னதாக சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். டி.ஆர்.ஓ., கணேஷ், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு சேர்மன் முத்துப் பெருமாள், கொத்தட்டை ஊராட்சித் தலைவர் தங்கபாண்டியன், சென்டெக்ட் இயக்குனர் பச்சைமால், கிரீடு செயலாளர் நடனசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். சுப்பையன் நன்றி கூறினார்.
திருமண உதவி திட்டத்தில் 23 பேருக்கு காசோலை
பரங்கிப்பேட்டையில் திருமண உதவி திட்டத்தில் 23 பெண்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள 23 இளம்பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது.
பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு சேர்மன் முத்துப்பெருமாள் தலைமை தாங்கி, காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர்கள் ராமச்சந்திரன், நடராஜன், மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி : ஒரு காலை நாளிதழ்
வியாழன், 11 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
உருசை உருசையா நியூஸ்-லாம் ரெகுலரா குடுத்து எங்கள அடிமையாக்கிட்டு , இப்ப அப்டேட் பண்ணாம அடம் புடிக்கிறிங்ளே இது உங்கள்க்கே நாயமா தெரிதா???
பதிலளிநீக்குசேவகன், பஃக்ருத்தீன், நிஜாம்,ஹமீத்,இப்னு ஹம்துன்,நூருல் ஹசன், இப்னு இல்யாஸ், இப்படி இத்தன பேர் இந்துமா அப்டேட் பண்ண மாட்டேங்குறிங்க...
என்னத்த சொல்றது போங்க....