செவ்வாய், 16 செப்டம்பர், 2008

கிறிஸ்துவ சகோதரர்கள் வருகை



மதங்களில் கடவுள் கொள்கை மற்றும் பிற சமயத்தவருடனான புரிந்துணர்விற்காக மதுரை இறையியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 34 கிறிஸ்துவ சகோதரர்கள் நேற்று 15.09.2008 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வந்திருந்தனர்.

மீராப்பள்ளி பேஷ்இமாம் ஜனாப் அப்துல்லா அவர்களும், ஜனாப். அப்துல் காதிர் மதனி அவர்களும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கையை பற்றியும், பைபிளில் கிறிஸ்துவை பற்றி கூறப்பட்டவை பற்றியும், குர்ஆனின் பார்வையில் ஏசுநாதர் என்பவர் இறைவன் அல்ல, இறைவனின் செய்தியை மக்களுக்கு சுமந்து வந்த ஒரு தூதர் எனவும், இறைவன் மூவர் அல்ல ஒருவராகத்தான் இருக்கமுடியும் எனவும், இறைவன் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்பதனைப்பற்றியும் மிக விரிவாக பைபிளில் இருந்தே ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்கள். வேதமளிக்கப்பட்டவர்கள் என்று குர்ஆன் அவர்கள பரிவுடன் அழைப்பதாக மதனி அவர்கள் குறிப்பிட்டு பேசி அவர்களின் வேதத்தையும், குர்ஆனையும் திறந்த மனதுடன் படித்துப்பதர்த்து நேர்வழி பெறுமாறு வேண்டினார். 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த உரைகள வந்திருந்த கிறிஸ்துவ சகோதரர்கள் பொறுமையுடன் அமர்ந்திருந்து கேட்டனர். ரமலான் காலமாக இருந்ததால் வந்திருந்த விருந்தினர்கள சரியான முறையில் உபசரிக்க இயலாமல் போனது குறித்து மீராப்பள்ளி நிர்வாகம் தனது வருத்தத்தை வெளியிட்டாலும் நல்ல சில உணவு ஏற்பாடுகள செய்து இருந்தது. 

இம்மாதிரியான புரிந்துணர்வு அமர்வுகள் நமதூருக்கு புதிது என்றாலும் திரளான பொதுமக்கள் அமைதியுடன் கலந்து கொண்டு உரையினை கேட்டனர். இனியாவது உலகமக்களுக்கான இறைவனின் செயதியை மாற்று மத சகோதரர்களுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியின் அருமை நமக்கு புரிபடுமா?

6 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ்.
    செய்திக்கு மிக்க நன்றி abuprincess.
    நன்மை மிகுந்த இர்ரமதான் மாதத்தில் அரசியல்வாதிகளை கூப்பிட்டு இஃப்தார் நடத்துவை விட இவ்வாறான அமர்வுகள் பிற மதங்களுடனான நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து செயல்படுத்திட அனைவரும் முன் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த அமர்வு குறித்து சில கிறிஸ்த்தவ சகோதரர்களின் கருத்துக்களை கேட்டு வெளியிட்டிருந்தால் இன்னும் உற்சாகமாக இருந்திருக்கும்.

    பரங்கிப்பேட்டை முஸ்லிம்களுக்கு புதிய, இனிப்பான செய்தியை கொடுத்துள்ளீர்கள்.நீங்கள் இறுதியில் குறிப்பிட்ட வரிகள் தான் அனைவரையும் ஈர்க்க வேண்டும். இறைவன் துணைப் புரியட்டும்.

    சகோதரர் அப்துல் காதர் மதனியின் உரை கிறிஸ்த்தவர்கள் மட்டுமில்லாமல் கூடி இருந்த முஸ்லிம் சகோதரர்களில் பெரும்பாலானோருக்கும் "புத்தம் புதிய" செய்திகளாக இருந்திருக்கும். அப்துல்காதர் மதனி போன்ற கல்வியாளர்களை "தொடர்ந்து" பயன்படுத்திக் கொள்ள மீராப்பள்ளி நிர்வாகம் முன்னுக்கு வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. சகோ.நிஜாம் கூறுவதுபோல் அவர்களையும் பேச வாய்பளித்து இருக்கவேண்டும்.வருடம்தோறும் சில அமர்வுகள் இது போல் ஏற்பாடு செய்தால்.மாறுமத சகோதரர்களுக்கு நாம் எத்திவைத்த கடமையும் நிறைவேறும்

    பதிலளிநீக்கு
  4. In Saheeh al-Bukhaari and Saheeh Muslim, it is narrated that Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) said: When the Prophet (peace and blessings of Allaah be upon him) sent Mu’aadh ibn Jabal to Yemen, he said to him: “You are going to people from among the People of the Book, so let the first thing to which you call them be belief in Allaah alone (Tawheed). If they accept that, then tell them that Allaah has enjoined on them five prayers every day and night. If they pray then tell them that Allaah has enjoined on them zakaah from their wealth to be taken from their rich and given to their poor. If they agree to that then take it from them but avoid the best of people’s wealth.”

    பதிலளிநீக்கு
  5. பரங்கிப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் ஒரு நல்ல முன்னுதாரணம். மீரா பள்ளி நிர்வாகம் பாரட்டுக்குரிய நற்செயலைச் செய்துள்ளது. இதையே ரமளான் அல்லாத மற்ற நாட்களில் செய்திருந்தால் வந்திருந்த சகோதரர்களை மிகவும் அன்புடன் உபசரித்து பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் விருந்தோம்பும் தன்மையை இன்னும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. Mind onethg,,,, they just came to attend for thr education purpose... inshaallah atleast one of them may get the taste of right path...

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...