பரங்கிப்பேட்டை, கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்தில் கடந்த சிலவருடங்களாக தலைவர் எம். கவுஸ் ஹமீது அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதால், முன்னாள் நிர்வாகி எம்.கே. அபுல்ஹசன் அவர்கள் முன்னிலையில் 03.10.08 அன்று புதிய தலைவராக ஏ.எல். ஜாபர் சாதிக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ஹெச்.எம். முஹம்மது காமில், பி. முபாரக் அஹமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக ஏ.ஹெச். இர்ஃபான் அஹமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாரம்பரியம் வாய்ந்த கிரஸண்ட் நல்வாழ்வுச்சங்கத்திற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகத்திற்கு mypno வலைப்பூ சார்பிலும் கல்விக்குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.
தாமதமான செய்தி.
பதிலளிநீக்குC.W.O-வுக்கு வாழ்த்துகள்.
நற்பணிகள் தொடரட்டும்.
தாமதத்திற்கு வலைப்பூ காரணமல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
பதிலளிநீக்குYou have to be detective to collect the news
பதிலளிநீக்கு