வெள்ளி, 19 டிசம்பர், 2008

புதுப்பள்ளி பரபரப்பு

புதுப்பள்ளி நிர்வாகத்திர்க்கென இன்று ( 19.08.2008) தேர்தல் நடத்த வக்ப் வாரியம் திட்டமிட்டு நாள் குறித்திருந்த வேளையில், பள்ளி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கி விட்டது. அதனால் இன்று தேர்தல் நடக்கவில்லை.

இன்று ஜும்ஆ முடிந்து நீண்ட நேரம் பெரும் கூட்டமாக மக்கள் வெளியில் நின்று இருந்தனர். பள்ளியின் நிர்வாகம் சீரமயாதது குறித்த அதிருப்தி அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் கோர்ட்டில் ஸ்டே கோரி வழக்கு போட்ட ஃபஜூல் மாலிமார் வெளியில் வந்தபோது அவரிடம் சாத்வீகமாக கேள்வி கேட்க்க சிலர் சென்றதாகவும் அதை தொடர்ந்து சிறிது சலசலப்பானது. பிறகு அடி தடியாக ஆனது. பள்ளியில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டிருந்தனர். சில காலம் முன்பு நடந்ததை போல் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று அனைவரும் பயந்து இருந்த நிலையில் பள்ளியினுள் நடந்த இந்த சம்பவத்தை சிலர் தடுத்து அமைதிபடுத்த முயற்சித்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிமிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

நிலைமை சற்று கட்டுக்கடங்குவதற்குள் ஆவதற்குள் போலீஸ் வந்தது. அவர்களுக்கு நிலைமையை ஆரம்பம் முதல் ஜுபைர் விளக்கினார். பிறகு ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் வந்து சேர்ந்தார் . பிறகு வழக்கு கொடுக்க ஒரு தரப்பு யூனுஸ் அவர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். கும்மத் பள்ளியில் ஏற்பட்ட இந்த சம்பவங்களினால் ஊர் முழுவதும் சற்று பரபரப்புடன்தான் வருகிறது.

12 கருத்துகள்:

  1. யா அல்லாஹ் ...இந்த ஊர் ....உன்னுடைய தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு போவதை விட்டு பாதுகாக்குமாறு உன்னிடமே வேண்டுகிறேன்....

    இவர்களாகவே தங்களின் நல்லவைகளை மாற்றும் வரை ...அல்லாஹ் இவர்களின் நல்லவைகளை மாற்றமாட்டான்.

    Allah Says:

    "For each (person), there are angels in succession, before and behind him.[] They guard him by the Command of Allâh. Verily! Allâh will not change the good condition of a people as long as they do not change their state of goodness themselves (by committing sins and by being ungrateful and disobedient to Allâh). But when Allâh wills a people's punishment, there can be no turning back of it, and they will find besides Him no protector. (Ra'd 13:11)

    தமிழில் படிக்க ...
    http://www.alketab.com/quran_14.asp?iPage=2


    அல்லாஹ் மிக அறிந்தவன்,...மிக்க ஞானம் உடையவன்

    பதிலளிநீக்கு
  2. பழைய நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதியநிர்வாகத்தை அமைப்பது ஒன்றும் தேச விரோத குற்றமில்லையே?? அப்படியெனில் புதுப்பள்ளி விசயத்தில் ஏன் தான் இத்தனை எதிர்ப்புகளோ....
    சாந்தி (இஸ்லாம்) மார்கத்தில் இருந்துக்கொண்டு சந்தி சிரிக்க அடித்துக்கொள்வது வேதனையாகதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. "புதுப்பள்ளி பரபரப்பு... நிர்வாக தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது அடி-தடி கலாட்டா"

    ஆஹா நம்மவர்களுக்கு இனி கவலையில்லை, மென்று திங்க புதுப்பள்ளி "அவுல்" கிடைச்சாச்சு இது கொஞ்ச நாளைக்கு ஒடும்.

    அப்புறமென்ன, புதுப்பள்ளியின் வளர்ச்சி எப்போதும்போல் கேள்வி(????)குறிதான்.

    பதிலளிநீக்கு
  4. subhaanallah,

    Prophet(SAW) said the last hour will not come until people vie with one another over masjids. abu dawood

    this is a sad but rampant occurence in tamilnadu.

    பதிலளிநீக்கு
  5. மீராப்பள்ளியில் என்ன பிரச்சனை என்பதை தெரிவித்தல் நல்லது. கும்மத்பள்ளி பிரச்சனைக் குறித்து மீராப்பள்ளியில் அடிதடி நடந்ததாக கேள்வி.

    பதிலளிநீக்கு
  6. புதுபல்லியில் யாராவது ஒரு புது பாபாவை அடக்கி அங்க ஒரு தர்ஹா கட்ட திட்டமோ?

    அப்படி இல்லனா....ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு, தள்ளு முள்ளு....?

    கம்யூனிச காஃபிர்களின் தேர்தல் திட்டத்தை பின்பற்றாமல் ....இஸ்லாமிய திட்டத்தை பின்பற்றி சுமுகமா முடிக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. அப்பாஸ் அவர்களுக்கு,


    மீராப்பள்ளியில் பிரச்சினை ஒன்றுமில்லை தங்களுக்கு யாரோ தவறான தகவலை தந்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  8. //"I guess too many free people in pno..........:)"//

    atleast you got time for write this commends

    பதிலளிநீக்கு
  9. Dear Maanavn what I have written may sound harsh but dear think carefully and see if there is at least an atom of truth in it.........cheers anyway merry christmad and a happy new year

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...