தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை கவனமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்திக்கொள்வது முக்கியத்துவம் பெற்று வரும் இவ்வேளையில் சத்தமில்லாமல் ஒரு செய்தி நெட்வொர்க்கை உருவாக்கி சாதித்து வருகிறார் சாதாத் என்ற பரங்கிபேட்டை இளைஞ்ர்.
பரங்கிபேட்டை சுமையா சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மகனான இவர், மொபைல் மூலம் உலக நடப்புகள் முதல் பரங்கிபேட்டை செய்திகள் வரை தனக்கென இருக்கும் ஒரு வாசகர் வட்டத்திற்கு நாள் பொழுதும் செய்திகள் அளித்து வருகிறார். இவரின் மொபைல் நெட்வொர்க்கில் இணையும் மொபைல் வாசகர்களுக்கு உலக செய்திகள் முதல் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் எஸ் எம் எஸ் களாக வந்து விழுகின்றன.
இவரின் மொபைல் நெட்வொர்க்கில் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவியதற்கு : நீங்கள் செய்ய வேண்டியது JOIN
கொசுறு செய்தியாக சாதாத் ஒன்று சொன்னார்:
இந்த சேவை லோக்கல் மொபைலுக்கு மட்டும் தானாம். வெளிநாடு வாழ் சகோதரர்கள் இதை வைத்து காமடி ஏதாவது பண்ணிவிட போகிறார்கள் என்று கொஞ்சம் சிரித்து வைத்தார்.
(ஓ அப்படி வேற இருக்குல்ல....? )
ஏற்கனவே இந்த மொபைல் கம்பெனிக்காரங்க கொடுக்கும் sms தொல்லை தாங்கமுடியலே,இதுலே உள்ளுர் SMS சேவை வேறயா? என்னாத்தைசொல்றது ஹும்.
பதிலளிநீக்கு