வாரத்தில் பல தடவை மருத்துவமனையின் தண்ணீர் தொட்டி பல மணி நேர கணக்கில் வழிந்து ஓடி அங்கிருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை நிரப்பி மீண்டும் வெளியேறி ஓடி சஞ்சீவிராயர் கோயில் முச்சந்தி வரை வந்தாலும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
புதிய கட்டிடத்திலும் அதே நிலை அங்கிருக்கும் நீர் தொட்டி வழிந்து..... (கடந்த வரியை படித்து கொள்ளுங்கள்).
நீர் இறைக்கும் மோட்டார் இந்த மின்வெட்டு காலத்திலும் கதற கதற ஓடிக்கொண்டே இருக்கும். மின்சாரமும் மோட்டாரும் இவர்கள் வீட்டுடையது அல்லவே. அரசாங்கத்தினுடையது தானே.... யார் கேட்க போகிறார்கள்?.
மின்சாரம், பொது சொத்துக்கள், இயற்கை வளம் விரயம், என்று வீணடிப்புக்களில் காட்டும் அலட்சியத்தை நோயாளிகள் மீதும் காட்டி விடுவார்களோ என்று தான் பயமாக உள்ளது.
இனியாவது இதை கவனித்து சரி செய்யுமா மருத்துவமனை நிர்வாகம்?
(பத்திரிகை நாகரீகம் கருதி பல பல முறை சுட்டி காட்டிய பிறகே இச்செய்தி வெளியிடப்படுகிறது)
"அலட்சியம்" .....அதனுடன் சேர்ந்து நம்மை யார் கேள்வி கேட்கப்போகிறார் என்கிற "அதிகாரகர்வம்" இதன் எதிரொலி மக்கள் வரி பணம் வழிந்தோடுகிறது....தண்ணீராய்...
பதிலளிநீக்குஅரசு மருத்துவமனை என்றாலே நம் மக்களுக்கு ஒருவிதமான சலிப்பு காரணம் ஊழியர்கள் நோயாளிகளிடம் காட்டும் (மனித)நேயம்(?)அப்படிப்பட்டது.
பதிலளிநீக்குபொதுவாக இவர்கள் தம்தமது பாக்கெட் நிரம்புவதை தான் பார்பார்களே தவிர, தண்ணிர் நிரம்பிவழிவதை எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்களோ?!