வெள்ளி, 18 ஜூலை, 2008

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டையில் ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின் நிறுத்தத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். நகரில் தினமும் சுமார் 2 மணிநேரத்திற்கு இரவிலும், பகலிலும் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்றும் (வெள்ளி) கடந்த செவ்வாய் அன்றும் 6 மணிநேரம் மின்சாரம் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. இது குறித்து மின்வாரியத்தை கேட்டபோது, "இனி பிரதி செவ்வாய் கிழமைகளில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளி கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் மின்உற்பத்தி தட்டுப்பாட்டினால் தினமும் 2 மணிநேரம் மின்னிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்'ளது.

3 கருத்துகள்:

  1. அப்ப இனி, பிரதி செவ்வாய், வெள்ளி விடுமுறை என்று சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  2. மக்களே மன்னிச்சு கொள்ளவும், ஆற்காடு ஜயா காடுவெட்டி குருவை கைது செய்வதில் கடுப்பா இருந்திட்டாரு. அதான் இப்படியெல்லாம்!

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் ஆளும் கட்சியின் மகிமை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளோடு விளையாடுவதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் சந்தோஷம் தான் என்றாலும் திமுகவிற்கு முதலிடம்.

    திரைத்துறை மீதும், நடிகர் நடிகைகள் மீதும் கலைஞருக்கு உள்ள அக்கறையில் பகுதி நேர அக்கறையாவது பொதுமக்கள் மீது இருக்க வேண்டும். கலை வளர்ச்சி என்றப் பெயரில் தட்டுப்பாடில்லாமல் அங்கு அனைத்தும்? கிடைக்க வழிவகுக்கும் கலைஞர் ஆட்சி தண்ணீர், மின் வெட்டுகளிலும் சாதனைப்படைத்து வருகின்றது.

    இலவச கலர் டீவி போன்ற திட்டங்களை விட மக்களின் மின்சாரம் போன்ற அத்தியாவசியத்தின் பக்கம் கவனம் செலுத்துவதே சிறந்த ஆட்சிக்கு அடையாளமாகும்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...