மீன்களின் இனவிருத்தியை மேம்படுத்த விசைப்படகு, இழுவலைகளை கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் - மீனவர்களுக்கு கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்!
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க விசைப்படகு மற்றும் இழு வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீன்பிடிக்க தடைஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (புதன் கிழமை) முதல் மே 29-ந் தேதிவரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளத்தை பாதுகாக்க
கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழு வலைப்படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
45 நாட்களுக்கு...
கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி இந்த 45 நாட்கள் முடியும்வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக