வியாழன், 21 மே, 2009

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் அரசு பஸ் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் காயம்

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் அரசு பஸ் கண்ணாடிகளை மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கினர்.

இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வந்த தகவலை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராசு (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார்.

பஸ் புவனகிரி பெருமாத்தூர் வழியாக சென்ற போது மர்ம மனிதர்கள் சிலர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அரசு பஸ்சின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

இதன் சேத மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

இது பற்றி பஸ் டிரைவர் ராசு புவனகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், ஏட்டு ராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

கைது

அதேபோல் பரங்கிப்பேட்டையில் இருந்து பி.முட்லூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் வந்தது.

பஸ்சை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த பஸ் சேவாமந்திர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அகரத்தை சேர்ந்த வீரமணி என்பவர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது.

இது பற்றி பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...