ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (26.12.2010) செய்தியாளர்களிடம் கூறியது:
சுனாமி துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது. சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய மாநில அரசுகள் சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,090 வீடுகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
ராஜீவ்காந்தி சுனாமி நிவாரணத் திட்டத்தில் 1,589 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கடற்கரையில் 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தூரத்துக்குள் குடியிருப்போருக்கு வீடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில், 351 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் சிறப்புத் திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இதுவரை ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
சுனாமியில் பெற்றோரை இழந்த 52 குழந்தைகள், கடலூர் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இலவசக் கல்வி, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தகவல்களை தெரிவிக்க தற்போது வயர்லஸ் கருவிகள், கட்டணமில்லா தொலைபேசி வசதி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் பல நேரங்களில் மின்சாரம் துண்டிப்பால் கருவிகள் இயங்காத நிலையும் உள்ளது. எனவே தனி எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டவர் நெய்வேலியில் நிறுவப்படும் என்றார் ஆட்சியர்.
Source: Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக