மாவட்டச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்டச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 24 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகரில் இருந்த துர்கா நெய்வேலி டவுன்ஷிப்பிற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய சித்ரா சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய கலாவதி பரங்கிப்பேட்டைக்கும், புதுப்பேட்டை திருவேங்கடம் திருப்பாதிரிப்புலியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

நடுவீரப்பட்டு வாசுதேவன் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கும், சிதம்பரம் (டவுன்) வனஜா விருத்தாசலத்திற்கும், சிதம்பரம் (தாலுகா) மணிவாசகம் குமராட்சிக்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய வசந்தகுமாரி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய மணமல்லி கடலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேத்தியாத்தோப்பு குமார் ஆவினங்குடிக்கும், சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையம் பாண்டிச்செல்வி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், காட்டுமன்னார்கோவில் மணி புவனகிரிக்கும், சோழதரம் சக்தி காட்டுமன்னார்கோவிலுக்கும், திருப்பாதிரிப்புலியூர் ஆனந்தபாபு பண்ருட்டிக்கும், கடலூர் துறைமுகம் கவிதா காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லூசி சிதம்பரம் தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி திருமேனி விருத்தாசலத்திற்கும், நெல்லிக்குப்பம் எழிலரசி குள்ளஞ்சாவடிக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய பவானி நெய்வேலி தர்மலுக்கும், புத்தூர் முத்துக்குமரன் நடுவீரப்பட்டிற்கும், பரங்கிப்பேட்டை மகேஸ்வரி பெண்ணாடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நெய்வேலி தர்மல் கிருபாலட்சுமி ரெட்டிச்சாவடிக்கும், கம்மாபுரம் அமல்ராஜ் காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லட்சுமி புதுப்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Source: Dinamalar

திங்கள், 27 டிசம்பர், 2010

கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க F.M. ரேடியோ

சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க, புதிய எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை தொடங்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (26.12.2010) செய்தியாளர்களிடம் கூறியது:

சுனாமி துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது. சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய மாநில அரசுகள் சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,090 வீடுகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

ராஜீவ்காந்தி சுனாமி நிவாரணத் திட்டத்தில் 1,589 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

கடற்கரையில் 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தூரத்துக்குள் குடியிருப்போருக்கு வீடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில், 351 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் சிறப்புத் திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இதுவரை ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

சுனாமியில் பெற்றோரை இழந்த 52 குழந்தைகள், கடலூர் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இலவசக் கல்வி, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தகவல்களை தெரிவிக்க தற்போது வயர்லஸ் கருவிகள், கட்டணமில்லா தொலைபேசி வசதி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் பல நேரங்களில் மின்சாரம் துண்டிப்பால் கருவிகள் இயங்காத நிலையும் உள்ளது. எனவே தனி எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டவர் நெய்வேலியில் நிறுவப்படும் என்றார் ஆட்சியர்.

Source: Dinamani

29-ல் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

அக்டோபர்- டிசம்பர் காலாண்டுக்கான மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் என்று, கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சி.மு. ரவிராம் அறிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய, விழுப்புரம் மண்டலத்துக்கான நுகர்வோர் குழுக்களின் மின்வாரிய குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு, விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

விழுப்புரம் மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான மனுக்கள் ஏதேனும் இருந்தால், கடலூர் மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்புமாறும், மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Source: Dinamani

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கடலூர் மாவட்ட ஜமாஅத் அலுவலக திறப்பு விழா

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், மாவட்ட செயலாளர் கமாலுதீன், மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: P.I.Jகுழுமம்