திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், நேற்று காலை நடைப்பெற்ற நேர்காணலில் பரங்கிப்பேட்டையிலிருந்து விருப்ப மனு தாக்கல் செய்திருந்த பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், A.R.முனவர் ஹுசேன், M.K.பைசல் யூசுப் அலி, கைருன்னிசா, புருஷோத்தமன், ஒன்றிய சேர்மன்கள் முத்து.பெருமாள், செந்தில் குமார், மாமல்லன், முன்னாள் M.L.A. சரவணன், தச்சக்காடு ராமதாஸ், டாக்டர் அமுதா பெருமாள், திருமாறன், கோவிந்தராஜ், ஷாஆலம், பேராசிரியர் சபாபதி மோகன், உட்பட 31 நபர்கள் சிதம்பரம் தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தனர், இவர்கள் அனைவர்களையும் ஒரே நேரத்தில் அழைத்து, உங்கள் அனைவர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி, காலமின்மையால் தனித்தனியே சந்திக்க முடியவில்லை, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுங்கள், தலைவர் முடிவினை அறிவிப்பார் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பேராசிரியர் சபாபதி மோகன் புவனகிரி தொகுதிக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார்.
முன்னதாக புவனகிரி தொகுதிக்காக நடைப்பெற்ற கூட்டு நேர்காணலில், "புவனகிரி தொகுதியில் தி.மு.க எப்போது வெற்றி பெற்றது? உள்ளிட்ட சில கேள்விகள் நேர்காணலில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டது, மேலும் பங்கேற்றோர் அனைவர்களும் ஒரே குரலில் தி.மு.கழகம் புவனகிரியில் போட்டியிட வேண்டும் என்று நேரடி வேண்டுகோளும் கட்சித் தலைமையிடம் விடுத்துள்ளனர். ஆனால் புவனகிரி தொகுதியினை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், பா.ம.க மறுப்பதாகவும் நேற்றிரவு கிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது.
அ.தி.மு.க சார்பில் அருண்மொழிதேவன் M.L.A, முன்னாள் அமைச்சர் கலைமணி, தோப்பு சுந்தர், V.K.மாரிமுத்து, உள்ளிட்டோரும், தே.மு.தி.க சார்பில் சபா.சசிகுமார், ஷபியுல்லாஹ், காங்கிரஸ் சார்பில் பரங்கிப்பேட்டை R.குமாரமுருகன், சத்தியமூர்த்தி, P.P.K.சித்தார்த்தன், வழக்கறிஞர் வேல்முருகன், ராதாப்பிள்ளை உள்ளிட்டோர்களும், சிதம்பரம் அல்லது புவனகிரி தொகுதிக்காக முயற்சி செய்து வருகின்றனர். புவனகிரி தொகுதிக்காக செல்வி இராமஜெயம் M.L.A. விண்ணப்பித்துள்ளார். பா.ம.க சார்பில் தேவதாஸ் படையாண்டவர், V.M.S.சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார்.இதில் சிலர் மிகத் தீவிரமாக தங்கள் கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களின் தொடர்பின் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.
தி.மு.க அணியில் சிதம்பரம் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதை பொறுத்த வரையில் மாவட்ட அரசியலே பிரதான காரணியாக இருக்கிறது. எது எப்படியோ சிதம்பரம் தொகுதி பற்றி," நம் கட்சி போட்டியிடுமா? நம்மவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?" போன்ற மணிக்கொருதரம் மெருகேற்றப்படும் கலவையான கருத்துக்களுடன் விவாதங்கள் ஆங்காங்கே பலமாக நடைப்பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக