தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணியில் தொகுதி பங்கீடுகள் முடிவுப் பெற்று, அது குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாகலாம் (?!) என்று தெரிய வருகிற்து. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் தொகுதி பங்கீடுகள் பின்வருமாறு இருக்கலாம் என்று மேலிட வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார்.
கடலூர், விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், புவனகிரி, நெய்வேலி ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திட்டக்குடி, காட்டுமன்னார்குடி ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் தி.மு.கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம், நெய்வேலியில் வேல்முருகன், காட்டுமன்னார்குடியில் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடலாம் என்றும் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக