சென்னையில் இருந்து திருப்பூருக்கு தனியார் ஆம்னி பஸ் 07-06-2011 இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சற்று முன் சென்ற போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து டிரைவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வேலூர் கலெக்டர் நாகராஜ் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஜெயராம், தீயணைப்புத்துறை வேலூர் சரக துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
முன்னர் வந்த செய்தி:
வேலூர் மாவட்டம் அவலூர் கிராமத்தில் உள்ளது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இச்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 07.06.2011 அன்று இரவு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் யாரும் தப்பிக்க முடியததால் 27 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து பரங்கிப்பேட்டையில் முக்கிய புள்ளி ஒருவர் இருக்கும் கட்சியை கை கழுவிவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவாப்பார்த்தாராம். ஆனால் 6 மாதத்திற்கு கட்சியில் புதிய சேர்க்கை இல்லை என்று தலைமை சொல்லிலிட்டதாம். பெரும்பாலும் உ.தேர்தல் வெற்றி என்பது ஆளும்கட்சிக்கே சாதகமாக அமையும் என்பதால், கட்சியில் உள்ள நகர சிறுபான்மை பிரிவு சார்பில் ஒருவர் மாவட்டம் வழியாக முயற்சி செய்துள்ளார். அதை மாவட்டமே மறுத்துவிட்டதாம். சிறுபான்மையோ அல்லது யாரோ அது முக்கியமில்லை. நல்ல ஆளாக இருக்கனும். எனவே, இளையதலைமுறையினரில், சிறுபான்மையிளராக இருந்தாலும் ஓ.கே. நல்ல ஆளைத் தேடுங்கள் என்று நகரத்திற்கு மாவட்டம் ஆணையிட்டுள்ளதாம்.
பதிலளிநீக்குதலைப்பிற்கு சம்மந்தம்யில்லாத கருத்தை பதிவு செய்யும் ஒற்றனை வன்மையாக கண்டிக்கின்றேன்.
பதிலளிநீக்குமாட்ரேட்டர் இதனை கவனிக்கவும்.