பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 8 ஜூன், 2011

திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரின் ஜாமீன் மனுக்களையும் விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து கனிமொழியும், சரத்குமாரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.

2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ஓ.பி.சைனி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

ரூ 214.84 கோடியை கடனாகப் பெற்றதாக கலைஞர் டிவியின் வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ 214.86 கோடி அளித்ததாக சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-10 ஆண்டு வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சினியுக் நிறுவனம் பால்வா மற்றும் மொரானி சகோதரர்களுக்கு சொந்தமானது. சினியுக் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கின்படி, அந்த நிறுவனம் ஆசிப் பால்வாவுக்கு சொந்தமான குஸேகாவோன் நிறுவனத்திடம் இருந்து ரூ 212 கோடியை கடனாகப் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிப் பால்வா டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் ஒரு இயக்குநராவார். டிபி ரியாலிட்டி நிறுவனம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


8 கருத்துரைகள்!:

குமரன்-ஈரோடு சொன்னது…

இது திமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. உயர்நீதி மன்றம் செல்லப்போவதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

Arulmozhi சொன்னது…

தீர்ப்பை கூறிவிட்டு நீதிபதி தயாநிதி பையனை தேடினாராம். புள்ளான்டான் வரவில்லை என்தால் தேட சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறாராம். கூடிய விரைவில் திஹார் சிறை எண் 7-ல் தயாநிதி கிரகப்பிரவேசம் நடத்துவார்.

பெயரில்லா சொன்னது…

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததோ...இல்லையோ கருணாநிதியை தவிர யாரும் கவலைப்படபோவதில்லை.

ஆனால் நீங்கள் வெளியிட்ட "கனி"யின் புகைப்படமே செய்தியை முழுவதும் படிக்காமலேயே புரியவைக்கும்.

ராஜா, திருப்பூர் சொன்னது…

நச் படம் தலைவா, கலக்குறிங்க சந்துரு

அழகன் நம்பி சொன்னது…

நான் மேட்டர படிக்கலே தலைப்பும் படமும் எல்லாத்தையும் சொல்லிடிச்சி வாத்தியாரே

ஒற்றன் சொன்னது…

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து பரங்கிப்பேட்டையில் முக்கிய புள்ளி ஒருவர் இருக்கும் கட்சியை கை கழுவிவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவாப்பார்த்தாராம். ஆனால் 6 மாதத்திற்கு கட்சியில் புதிய சேர்க்கை இல்லை என்று தலைமை சொல்லிலிட்டதாம். பெரும்பாலும் உ.தேர்தல் வெற்றி என்பது ஆளும்கட்சிக்கே சாதகமாக அமையும் என்பதால், கட்சியில் உள்ள நகர சிறுபான்மை பிரிவு சார்பில் ஒருவர் மாவட்டம் வழியாக முயற்சி செய்துள்ளார். அதை மாவட்டமே மறுத்துவிட்டதாம். சிறுபான்மையோ அல்லது யாரோ அது முக்கியமில்லை. நல்ல ஆளாக இருக்கனும். எனவே, இளையதலைமுறையினரில், சிறுபான்மையிளராக இருந்தாலும் ஓ.கே. நல்ல ஆளைத் தேடுங்கள் என்று நகரத்திற்கு மாவட்டம் ஆணையிட்டுள்ளதாம்.

உளவாளி சொன்னது…

முக்கிய புள்ளி ஒருவர் இருக்கும் கட்சியை //கை கழுவிவிட்டு// ஆளுங்கட்சிக்கு தாவாப்பார்த்தாராம்.

அய்....அய் கன்டுபுடிச்சிட்டேன்....
கைய...கை கழுவ நெனச்ச அந்த புள்ளி ராசாவா கன்டுபுடிச்சிட்டேன்

Karun சொன்னது…

உப்பு திண்ணா தண்ணி குடி! தப்பு செஞ்சா தலயில் அடி!

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234