பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதியில் கடந்த மே 9-ம் தேதி ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தனியாருக்கு சொந்தமான 33 மீன் விற்பனை மையங்கள் சேதமடைந்து 1 கோடியே 79 லட்சத்து 5 ஆயிரத்து 690 ரூபாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியானது.
இது குறித்த விரிவான செய்திகள் புகைப்படங்களுடன் நமது MYPNOவில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மீன் வியாபாரிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அன்னங்கோயில் மீன் வியாபாரிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கி வேண்டியும்இ மீண்டும் அவர்களது வாழ்வாதார உரிமையை பெற்றுத்தருமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சரை கடந்த ஜூன் 6-ம் தேதி சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கையை ஏற்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்குவதாக மீன்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார் என சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழநி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக