பொதுமக்களிடம் குழப்பமான சூழ்நிலை இருப்பதால் ஊரின் பொதுக்குழு கூடி முடிவு செய்யப்பட வேண்டும். எனவே இதன் உண்மை நிலையை அறிந்து தெளிவு ஏற்படும் வரை பதவி பிரமாண நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையாளர் ஆடிட்டர் I.முஹம்மது இல்யாஸை சந்தித்து முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த முஹம்மது இல்யாஸ், “தேர்தல் முடிவடைந்து சான்றிதழ் வழங்கியதோடு தங்களது கடமை முடிவடைந்து விட்டது. தற்போதைய ஜமாஅத் நிர்வாகம் தான் பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஜமாஅத் அமைப்பு நிர்ணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போதைய ஜமாஅத் நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.
பின்னர் மீராப்பள்ளியில் நடைபெற்ற சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் தற்போதைய ஜமாஅத் தலைவர் (பொறுப்பு) I.இஸ்ஹாக் மரைக்காயரை இம்மூன்று அமைப்பினரும் சந்தித்து கேட்டனர். இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்மை தான், ஆனால் எங்களின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரே நாள் தான் இருப்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
பின்னர் மீண்டும் மீராப்பள்ளியில் கூடி ஆலோசனை செய்த இம்மூன்று அமைப்பினரும், சனிக்கிழமை (11-02-2012) அன்று பரங்கிப்பேட்டையில் தங்கள் அமைப்புகளால் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்ற போதிலும், பொது அமைதியினை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிடுவதாகவும், ஆனால் பொதுமக்களிடம் அதிக அளவில் கையெழுத்துகள் பெற்று ஜமாஅத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கும் மீராப்பள்ளி நிர்வாகி M.O.ஜமால் முஹம்மது வசம் பொதுமக்களின் கையெழுத்து அடங்கிய மனு வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.
ஜமாஅத் தலைவர் பதவியேற்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமுதாய அமைப்புகள், J.ஹஸன் அலி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து உண்மை நிலை தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது பரங்கிப்பேட்டையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அன்பர்களே!
பதிலளிநீக்குமார்க்கக் கடமைகளில் ஒன்று சேராத இவர்கள் எதில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...
முதலில் தங்களிடம் உள்ள குறைகளை களைந்து விட்டு, தங்கள் தலைமையிடம் சொல்லி அவர்களின் இயக்கத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு அப்புறம் இங்கே பேசட்டும்...
இவர்களின் ஆட்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் எப்படி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்? என்று பாருங்கள்...
இப்படிக்கு,
அபூபக்கர்,
பரங்கிப்பேட்டை
முந்தைய ஜமாத்தார்களும், தற்போதுபதவிக்கு வர இருக்கும் புதிய ஜமாத் தலைவரும் போட்டுக்கொண்டதாக சொல்லப்படும்(டீல்) செய்தி உண்மையாக இருக்குமேயானால், நாளை இவர்கள் அல்லாஹ்விடம் பதில்சொல்லியே ஆகவேண்டும்.
பதிலளிநீக்குபதவி சுகத்துக்காக மக்களை ஏமாற்றிய இவர்களை பார்க்கும் போது எனக்கு ஏனோ (பதவியை தக்கவைத்துக்கொள்ள லஞ்சம் கொடுத்த நமதுமுன்னால்) பிரதமர் நரசிம்மராவ் ஞாபகம்தான் வருகிறது.
சமுதாய அமைப்பினரே
பதிலளிநீக்குசமுதாய மக்களை ஏமாற்றி அரசியல்வாதிகல் போல் திரை மறைவு பேச்சு வார்த்தை நடத்தி நாடகம் போட்ட இவர்களை நாளை பதவி ஏற்க அனுமதிக்காதீர்கள்.எப்டியாவது பதவி ஏர்பதை தடுத்து நிறுத்துங்கல்
சலாம்
பதிலளிநீக்குanbbu sagotharargalukku ...
எங்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள் ,,, எங்களின் கடிதத்தை நன்றாக படித்து பாருங்கள்
நாங்கள் புதிய ஜமாஅத் நிர்வாகத்தையோ பழைய ஜமாஅத் நிர்வாகத்தையோ எதிரியாக பார்க்கவில்லை ,, ஹசன் என்பவர் ஒரு நோட்டிஸ் போட்டுள்ளார் அதில் தேர்தலுக்கு முன் இரு தரப்பினரும் பதவி ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதனால் எதிர் தரப்பினர் தேர்தலில் நிற்காமல் விட்டு கொடுத்ததாகவும் போட்டி இன்றி DR வெற்றிபெற்ற பின் DR வாக்குறுதி மீறுவதாகவும் பழைய ஜமாத்திற்கு ஆதரவாக நோட்டிஸ் போட்டிருந்தார்
இந்த நோட்டிஸ் சம்பந்தமாக நாம் நோட்டிஸ் போட்ட ஹசன் அலியிடம் கேட்டபோது நோட்டிசில் உள்ளது உண்மை என்று கூறினார்
நமது கேள்வி என்னவென்றால் "இந்த நோட்டிசில் உள்ளது பொய் எனும் பட்சத்தில் ஊரை கொலப்பிய ஹசன் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"இந்த நோட்டிசில் உள்ளது உண்மை என்ற பட்சத்தில் ஊரின் பார்வையில் தேர்தல் என வெளிபடையாக அறிவித்துவிட்டு,, இரு சாராரும் தனது ஆதரவாளர்களை அழைத்து ஆதரவு கொடுங்கள் என்று கேட்டு ,,,, தேர்தல் அலுவலகம் என்று ஒன்று போட்டு அதில் அதிகாரிகள் என்று சிலரை உட்கார வைத்து,, தேர்தல் குழு மூலம் அனைத்து பள்ளிவாசல்களிலும் நோட்டிஸ் ஒட்டப்பட்டு ,, ஒருவர் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு மற்றொருவர் பன்னபோகிறார் என்ற பரபரப்பை ஏற்படுத்திவிட்டு,, ஊரிலும், ஊரை சேந்தவர்கள் வெளி நாட்டிலும் இருந்துகொன்டு இந்த தேர்தலால் பிரிவினை வந்துவிட கூடாது என்று குழுமத்தில் தேர்தல் வேண்டாம் தேர்தல் வேண்டாம் என்று பல நாட்கள் பதிவிட்டு நிலைமையை இப்படி படு சீரியசாக விட்டு விட்டு ,
பின் பக்கமாக யாருக்கும் தெரியாமல் இவர்களுக்குள் பதவியை பங்கு போடுவது பற்றி பேசி கொன்டால் இது சரியா ?? அதுமட்டுமல்லாமல் ஒப்பந்தம் உறுதியாகி அதன் இறுதி ஒப்பந்தமாக கடைசி வரை நீங்கள் மனுதாக்கல் செய்வது போன்றே நிலைமை இருக்கட்டும் நீங்கள் இப்போதே போட்டி இடபோவதில்லை என்றால் வேறு ஒருவர் போட்டி மனு தாக்கல் செய்வார் எனவும் பேசப்பட்டதாக ஹசன் சொல்கிறார் இப்படி இருந்தால் இது சரியா ??
ஊரின் பெரும்பாலானவர்கள் தேர்தல் வேண்டாம் என்றே சொன்னார்கள் நிலைமை இப்படை இருக்கையில் இந்த இரு தரப்பினரும் வெளிபடையாகவே மக்களிடத்தில் இப்படி அறிவித்திருக்கலாம் " தேர்தல் பிரச்சனை என்று மக்களே கவலை படாதீர்கள் நாங்கள் இரு தரப்பும் ஊரின் நன்மைக்காக ஒன்று கூடி பேசி நல்ல முடிவெடுக்கிறோம்" என்று மக்களிடத்தில் ஒரு நோட்டிஸ் விநியோகித்திருந்தால் மக்கள் அதை முழு சந்தோசத்துடன் ஏற்று கொண்டிருப்பார்கள் அதைவிட்டு விட்டு ஒட்டுமொத்த ஊரையும் ஏமாற்றி ஐக்கிய ஜமாத்திலும் பின் பக்க அரசியல் செய்தால் இது சரியா ??
நமது கோரிக்கை இந்த நோட்டிசில் உள்ளது உண்மையா என விசாரிக்க வேண்டும் அது வரை பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியை தள்ளி போட வேண்டும் i,, நோட்டிசில் உள்ளது உண்மை என்றால் பதவி ஏற்க கூடாது ,, நோட்டிசில் உள்ளது பொய் என்றால் ஹசன் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ... நாங்க இப்படி சொல்வது தவறென்றால் மீண்டும் பொருக்கி திருடன் என எழுதுங்கள் அதையும் ஏற்று கொள்கிறோம் ..
தேர்தலுக்கு முன்பு பதவி ஒப்பந்தம் பைத்துல்மால் பொறுப்பு மற்றும் ஜமாஅத்
பொறுப்பு ஆகியவைகளில் ஒப்பந்தம் நடந்தது உண்மைதான் என்று பொறுப்பு தலைவர் இசாக் மரைக்கார் நானாவும் ,, முன்னாள் ஜமாஅத் துணை தலைவர் ஹமீது கவுஸ் நானாவும் எங்களிடம் உறுதி செய்தார்கள் ,,, மேலும் கூடுதலாக இசாக் மரைக்கார் சொன்னது நாங்கள் சில பெயரை நிர்வாகத்தில் போடகூடாது என்றோம் ஒற்றுகொன்டு இப்போது DR மாற்றி செய்கிறார் என கூறினார் ,,
இவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் இப்படி எழுதுவதாக ஒரு சகோதரர் கூறினார்,,,, அதற்கான விளக்கம் " TNTJ நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேறு பொறுப்பில் இருக்க கூடாது,,
புதிய ஜமாஅத் தரப்பை சேர்ந்த MES அன்சாரி நானா என்னிடம் போன் செய்து உங்கள் தரப்பிற்கு பொறுப்பு கொடுத்தால் ஏற்று கொள்வீர்களா என கேட்டார் , TNTJ நிர்வாகத்தில் இருந்து கொண்டு வேறு பொறுப்பில் இருக்க கூடாது எனபது TNTJ பைலாவில் உள்ள சட்டம் ,, பொறுப்பில் இல்லாவிட்டால் என்ன ஜமாஅத் செய்ய கூடிய நல்ல காரியங்களுக்கு நாம் TNTJ உதவியாக இருப்போம் என கூறினேன்" ..................... முத்துராஜா