சனி, 11 பிப்ரவரி, 2012

சட்டத்தில் இடமில்லை: டாக்டர் S.நூர் முஹம்மது

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் S.நூர் முஹம்மது நாளை பதவி ஏற்க இருக்கும் சூழலில், J.ஹஸன் அலி என்பவர் விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக சமுதாய அமைப்புகள் எழுப்பி இருக்கும் வினாக்கள், பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் விடுத்துள்ள அறிக்கை இவற்றிற்கிடையில், டாக்டர் S.நூர் முஹம்மது இன்று MYPNOவிடம் கூறுகையில்:

நடுநிலையாளர்களான H.அப்துல் ஹமீது, S.காஜா சுல்தான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் என்னை வந்து சந்தித்தனர்,

அதனடிப்படையில், சிதம்பரம் - கடலூர் ஆகிய ஊர்களில் இரு அமர்வுகள் நடத்தப்பட்டது, அப்போது பேசப்பட்டபடி B.ஹமீது கவுஸுக்கு ஜமாஅத் துணைத்தலைவர் பதவியும், M.E.அஷ்ரப் அலி, S.S.அலாவுதீன் ஆகியோர்களுக்கும் பொறுப்பு வழங்குவது என்றும் பேசப்பட்டபோது, ஊரின் ஒற்றுமையையும் நன்மையையும் கருதி, நான் சம்மதித்தேன். கூடுதலாக B.ஹமீது கவுஸுக்கு பைத்துல்மால் தலைவர் பதவியும் தர வேண்டும் என்றும் பேசப்பட்டபோது, நான் மவுனமாக கேட்டு கொண்டிருந்தேன்.

மேலும் தலைவராகிய நான் தவிர்க்க இயலாத சில நேரங்களில் ஜமாஅத் கூட்டங்களில் கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், துணைத்தலைவர் B.ஹமீது கவுஸுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க, ஒரு தீர்மானத்தினை கொண்டு வருகிறேன், சக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தால் அவ்வாறே செயல்படலாம் என்றேன்.

நான் முன்பு தலைவராக பதவி வகித்த போது பைத்துல்மால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதால், எனக்கு பைத்துல்மால் அமைப்பு விதிகள் தெரியவில்லை, நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே எனக்கு, பைத்துல்மால் அமைப்பு நிர்ணயச் சட்டவிதிகள் அடங்கிய புத்தகம் கா.மு.கவுஸ் மூலம் கிடைத்தது. அதை படித்து பார்த்த போது, ஜமாஅத் தலைவர் தான் பைத்துல்மால் அமைப்பின் தலைவராக இருக்க வேண்டும் என்று மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், சட்டத்தின்படி B.ஹமீது கவுஸ் தலைவராக முடியாது என்பதால் அதற்கு உடன்பட மறுத்தேன்.

மற்றபடி அவர்கள் சொன்னதையும் கருத்தில் கொண்டு பைத்துல்மால் செயலாளராக M.E.அஷ்ரப் அலி, பொருளாளராக S.S.அலாவுதீன் என்று நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து அனுப்பிய போது, அவர்கள் சம்மதம் தெரிவிக்க மறுத்ததுடன் பைத்துல்மால் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றனர். இச்சூழலில், காபந்து நிர்வாகமாக செயல்படும் இன்றைய ஜமாஅத் நிர்வாகம், இன்று காலை எனக்கு அனுப்பிய தபாலில், J.ஹஸன் அலி விடுத்துள்ள பிரசுரம் தொடர்பாக, சமுதாய அமைப்புகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதில் கிடைக்காதவரை ஜமாஅத் நிர்வாகத்தை ஒப்படைக்கமாட்டோம் என்று எழுதி இருப்பதாக தெரிவித்தர்.





மேலும் அவர் கூறுகையில், காபந்து ஜமாஅத் தலைவர் இருதரப்பையும் அழைத்து 5 நிமிடங்களில் சுமூக தீர்வு காணாமல், விடை கிடைக்கும் வரை நிர்வாகத்தை தரமாட்டோம் என்று சொல்வது மிகுந்த ஆச்சரியத்தை தருவதோடு, இது குற்றவியல் நடைமுறைக்கு வழிவகுக்கும் என்றரர் டாக்டர் S.நூர் முஹம்மது .

ஹஸன் அலி வெளியிட்டிருக்கும் துண்டு பிரசுரம் தொடர்பாக கேட்ட போது, "அவர் மீடியேட்டர்களில் ஒருவராக இல்லை, அவர் இதனால் பாதிக்கப்படவுமில்லை. மேலும், இது சம்பந்தமான வினா எழுப்ப இருமுறை நடைபெற்ற சந்திப்புகளில் கலந்துக் கொண்டோர்களுக்கு மட்டுமே இதில் முழு உரிமை இருக்கிறது என்றார்.

சமுதாய அமைப்புகள் இப்போது எழுப்பி இருக்கும் வினாக்கள் தொடர்பாக கேட்டபோது, " சமுதாய நலனில் அக்கறை உள்ள இவர்கள் என்னை நேரடியாக சந்தித்து கேட்டிருக்கலாமே, என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சந்திப்பு: ஹம்துன் அப்பாஸ், MGF

4 கருத்துகள்:

  1. சலாம்
    ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகம் இன்று பதவி ஏற்க உள்ளது
    ஹசன் அலியின் நோட்டிசின் உண்மை நிலை தெரிந்தபின் பதவி ஏற்பு நடத்துங்கள் என்று ஊரில் உள்ள மூன்று அமைப்புகளின் சார்ப்பில் ஜனநாயக முறையில் கோரிக்கை வைத்தோம் ,( ரகசியமாக நடந்த பேரங்களை மக்கள் முன் கொண்டு வந்தோம் )

    பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு புதிய நிர்வாகம் சார்பில் எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது, எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காததால் நாங்கள் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியை
    புறக்கணிக்கிறோம்..

    ஊரில் ஒரு புரளி கிளம்பி உள்ளது "பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியை இவர்கள் தடுக்க போகிறார்கள் என்று " எங்களுக்கு அது வேலை அல்ல,,
    எங்களால் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு எந்த இடையூறும் இருக்காது..

    அனைவரும் நல்ல படியாக அல்லாஹ்விற்காக செயல்பட துஆ செய்கிறோம்................... (முத்துராஜா )

    பதிலளிநீக்கு
  2. சலாம்
    நடைபெற்று கொண்டிருக்கிற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் tmmk வின் நகர செயலாளர் பிலால் , INTJ வின் ஹாஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்,,
    TMMK தலைவர் ஜாகிர் ஹுசைன் மற்றும் சிலரும், INTJ மாவட்ட செயலாளர் கவுஸ் ஹமீது, நகர தலைவர் யஹயா மரைக்காயர்,, செயலாளர் நஸ்ருத்தீன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை TNTJ வில் யாருமே கலந்து கொள்ளவில்லை .. (முத்துராஜா )

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்க்காக தேர்தல் கமிஷன் அமைக்கபட்டு,அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கபட்டது.இத்தேர்தலில்கடந்த ஜமாத்தில் துனை தலைவராக பதவி வகித்த சகோதரர் .ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடுவார் என எதிர்பார்கபட்டநிலையில்,மற்றொறு வேட்பாளாராக மருத்துவர்.நூர் முஹம்மது அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்,இந்நிலையில் எதிர்பார்க்கபட்ட ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடாத நிலையில்,சகோ.நூர்முஹம்மது அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.இது நாம் அறிந்த ஓன்று
    ஆனால் ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடாததற்க்கு காரணமே முந்தைய ஜமாத்துக்கும்,தற்போதைய ஜமாத் தலைவருகுமிடயே சிலரால் நடத்தபட்ட பேச்சுவார்த்தையின் போது எற்பட்ட திரைமறைவு ஓப்பந்தத்தின் அடிப்படையில்தான் என சகோதரர் ஹசன் அலி என்பவர் சமீபத்தில்வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்த நோட்டீஸ் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில்,ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்த மருத்துவர்.நூர் முஹம்மது அவர்கள் ,முந்தைய ஜமாத்தாரின் திரைமறைவு ஓப்பந்ததுக்கு ஓத்துக்கொண்டது ஏன்..? மருத்துவர் அவர்கள் .அதிசயத்தை நிகழ்த்துவேன் என சொன்னது இத்தகையது தானா..?
    அடுத்ததாக நமது ஜமாத்தின் முன்னால் தலைவர் அவ்ர்கள் எனது முயற்சியின் காரணமாக சகோதரர் ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடமாட்டார் என சொன்னாரே , ஜமாத் பணம் வீண்விரயம் செய்வது தவிர்க்கபட்டது என மக்களெல்லாம் எவ்வளவு சந்தோஸபட்டார்கள்.உங்களின் அந்த முயற்சி நமதூரின் நலன் சார்ந்ததுயென நினைத்தோமே...ஆனால் இப்பால்லவா தெரிகிறது, அது முழுக்க..முழுக்க...உங்களின் "சுயநலம்" சார்ந்தது என்று
    அக இப்படி முன்னால்/இன்னால் ஜமாத் தலைவர்களின் பதவி ஆசையின் காரணமாக கடைசியில் பந்தாடப்பட்டது என்னவோ ஓன்றுமறியா நமதூர் மக்கள் தான் இந்த ஜமாத்கள் நேர்மையுடனும்,நீதியுடனும் செயல்பட்டன, இனியும் செயல்படும் அன்றும்,இன்றும் நம்பிக்கொண்டு உள்ளார்கள்.பாவம் நமதூர் மக்கள், தரங்கெட்ட அரசியல் நமதூரின் "ஜமாத்"தில் தடம் பதித்ததை அவர்கள்(மக்கள்) ஏனோ அறியவில்லை....
    ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கறிவான்.ஆமீன்

    ஆபிதீன்,பரங்கிப்பேட்டை

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...