பரங்கிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவரும் ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் வகித்தார். பேரணியில் மழைநீர் சேமிப்புத் திட்டம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பள்ளி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர்.
இதில் பேரூராட்சி து.தலைவர் நடராஜன், செயல் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
படங்கள்: முத்துராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக