திங்கள், 17 ஜூன், 2013

கல்வி கட்டணம்: நடவடிக்கை எடுக்க சவூதி கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை அமைப்பு ஜமாஅத்-திற்கு கோரிக்கை..!

சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின்  மாதாந்திரக் கூட்டம் கடந்த வெள்ளியன்று,  M .E  கவுஸ்  மாலிமார்  இருப்பிடத்தில் நடைபெற்றது. 
 
கூட்டத்தில்,  தற்போது  பரங்கிப்பேட்டையில் பள்ளிகளில்  அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வாங்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஜமாஅத் மூலம் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு மனு அளிக்க கோரி கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
 
மேலும் இந்த ஆண்டிற்கான கல்வி உதவி நிதி ஒதுக்கீடு, திருமண  உதவிக்கான மனு  ஒப்புதல் செய்து நிதி ஒதுக்கீடு, ரமலான் மாத கடைசி வாரத்தில்  இப்தாருடன் கூடிய கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது


ஜமாஅத்திலிருந்து  புதிய ஆம்புலன்ஸ் வாங்க நிதி உதவி கோரி வந்த தொடர்பான பணிகளுக்காக ஜமாஅத் தொடர்பாளர் ஜெய்னுல்லாபுதீனை (ஜெய்லா) நியமனம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...