சிங்கப்பூர்: சிங்கப்பூர்
வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு
சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பகல் சைனா டவுன் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா-வில் நடைபெற்றது.
தலைவர் A.R.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தினை G.M.மரக்கச்சி இறை வசனங்களை
ஓதி துவக்கி வைத்தார்.
செயலாளர் H.முஹம்மது
தாரிக் ஹுஸைன், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய
ஜமாஅத்-தின் கோரிக்கையான புதிய ஆம்புலன்ஸ், ஜக்காத், குர் ஆன் மக்தபா - ஃபித்ரா, புதிய
நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
பொருளாளர் M.G.கமாலுத்தீன் நிதி - நிலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில்
, புதியதாக பொறுப்பேற்றிருக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர், செயல் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த மாதம்
இறுதியில் இறைவனின் அழைப்பினை ஏற்று காலமான சிங்கப்பூர் அமைப்பின் உறுப்பினர் D.முஹம்மது
அப்துல் காதர் அவர்களின் அவரின் பிரிவால்
வாடும் குடும்பத்தாருக்கு சப்ர் என்னும் அழகிய பொறுமையை தந்தருளவும், மறைந்த சகோதரரின்
மறுமை வாழ்வு சிறக்கவும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்ட இறுதியில் தலைவர் A.R.அப்துல் கரீம் நன்றி கூறினார்.
படங்கள்: அண்ணன் மற்றும் MGK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக