வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து நடத்தி வரும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டிகைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. மொத்தம் 42 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தகுதி சுற்று ஆட்டங்களை தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது.
இதில புதுவை அணி முதல் பரிசு பெற்று கோப்பையை வென்றது. பரங்கிகப்பேட்டை "ஏ" அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது இடத்தை கே.என்.பேட்டை கடலூர் அணியும், நான்காவது இடத்தை கூத்தப்பாக்கம் கடலூர் அணியும், ஐந்தாவது இடத்தை பரங்கிப்பேட்டை "பி" அணியும் பிடித்தது.
இந்த கைப்பந்து போட்டிகளை ஹெச். முஹம்மது இம்ரான், ஏ. தல்பாதர் மற்றும் நண்பர்கள் வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) சார்பில் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக