பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 அக்டோபர், 2009

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி சிதம்பரத்தில் பிறந்தவர்

வெங்க்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952).

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார்.

அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் ஆடா யோனஃட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.

நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி: விக்கிப்பீடியா - தகவல்: இப்னு ஹம்துன்


வியாழன், 28 மே, 2009

சென்னையில் சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி

சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி சென்னையை அடுத்த மாத்தூரில் ஜூன் 6 முதல் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை பெட்ரோலியம் நிறுவனம் ஆதரவில் திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் இப்போட்டியை நடத்துகிறது.

பட்டம் வெல்லும் வீரருக்கு கோப்பையுடன் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
மொத்தப் பரிசுத் தொகை 1.05 லட்சம்.

போட்டியில் பங்கேற்போர் ஜூன் 1-ம்தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அமைப்புக் குழு செயலாளர் எஸ். பலராமனை தொடர்பு கொள்ளலாம். போன்: 9884424747

ஞாயிறு, 1 மார்ச், 2009

பரங்கிப்பேட்டை ஆசிரியைகள் பரிசு பெற்றனர்

ஏர் இந்தியா நிறுவனம், The Hindu நாளிதழ், மற்றும் தினமலர் சார்பில் 2008-09ம் கல்வி ஆண்டிற்கு தனித்திறன், தனிப்பட்ட சாதனை படைத்த ஆசிரியர்களை தேர்வு செய்து, "போல்ட் விருது' வழங்கப் பட்டது.

இதற்காக சென்னையில் நடந்த நேர் காணலில் நமதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி தமிழாசிரியை தமிழ்ச்செல்வி நாராயணசாமி கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து "போல்ட் விருது' பெற்றுள்ளார்.

இதே போல் நமதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி இரண்டமிடம் பெற்று "போல்ட் விருது' பெற்றார். இவர்களுக்கு தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, The Hindu நாளிதழ் ஆசிரியர் ராம், ஏர் இந்தியா நிர்வாகிகள் கையெழுத்திட்ட நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு.

சீதக்காதி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ்அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/-பரிசு வழங்கப் பெறும்.

இப்பரிசுக்காக இவ்வாண்டு ‘இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு - தமிழகம்ஒரு சிறப்புப் பார்வை' எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நூல்கள் A4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு 200 பக்கங்களுக்குக்குறையாமல் இருத்தல் வேண்டும். ( இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14செமீ - டெம்மி புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்கவேண்டும்) தாளில் ஒரு புறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப்பெறுதல் வேண்டும்.

தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்துபடிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2009 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்குவந்து சேர வேண்டும்

நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000வழங்கப்படும்.

தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கமுடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையை பழம்பெரும் தமிழ்எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது.

2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்குசதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும்

விவரமான விதிமுறைகளுக்கு எழுதவும்.
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்
சீதக்காதி மணிமாடம்
272 ( 688 ) அண்ணா சாலை
சென்னை 600 006

நன்றி : சமரசம் 16 - 31 ஜுலை 2008 ( பக்கம் 36 )
http://www.samarasam.com/