பிளஸ் 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிளஸ் 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2009

விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள் நகல் வேண்டுவோர் மற்றும் மறு கூட்டலுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் நகல் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு விடைத்தாள் ஜெராக்ஸ் வேண்டுவோர் பாடம் வாரியாக 275 ரூபாய்க்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.

அதேப்போன்று மறு கூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியியல் போன்ற இரண்டு பேப்பர் உள்ள பாடங்களுக்கு 305ம், பிற பாடங்களுக்கு 205 ரூபாயும் வரைவோலை எடுக்க வேண்டும்.

இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று வரைவோலையை இணைத்து கொடுக்க வேண்டும்.

10 முதல் 15 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.

இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஞாயிறு, 17 மே, 2009

பிளஸ்-2 தேர்வு : கடலூர் மாவட்டம் 75 சதவீதம் தேர்ச்சி!

பிளஸ்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள், அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

கடலூர் மாவட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி, வியாழக்கிழமை வெளியிட்டார்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜவகர், குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:


கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 66, நலத்துறைப் பள்ளிகள் 9, நகராட்சிப் பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளிகள் 29, சுயநிதிப் பள்ளி 1, மெட்ரிக் பள்ளிகள் 42 உள்ளிட்ட 148 பள்ளிகளைச் சேர்ந்த 23,655 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.


அவர்களில் மாணவர்கள் 11,426. மாணவிகள் 12,229.


தேர்வு எழுதிய மாணவர்கள் 11,426-ல் 8,114 பேரும், மாணவிகள் 12,229 பேரில் 9548 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 71.01 சதமும், மாணவிகள் 78.08 சதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 63.77.


கடலூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 79.16 சதம்.


கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 74.66 சதம்.


கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 71 சதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3.66 சதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது என்றார் குப்புசாமி.