சனி, 16 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டையில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்

62-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படடடது. காலை 9 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றினார். அனைத்துப் பள்ளிகூடங்களிலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக் நடைபெற்றது.


கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பாக அதன் நடைபெற்ற விழாவிலும் அதனை தொடர்ந்து அரிமா சங்கம் (Lions Club) சார்பில் மீராப்பள்ளி அருகிலும் சட்டமன்ற உறுப்பினர் திருமதி செல்வி ராமஜெயம் பங்கு கொண்டு இந்திய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்கிற கருத்தை மையமாக கொண்டு சிறப்பு கண்காட்சி மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய தகவல் துணுக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பயனுள்ள தகவல் தரும் விசயமாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்புக் சொற்பொழிவும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சின்னக் கடைமுனையில் ஜமாஅத்துல் உலமா சார்பில் சுதந்திர சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியன் பள்ளி முதல்வர் பாண்டியன் கரந்துக்கொண்டார். இவ்விழாவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது.

புதன், 13 ஆகஸ்ட், 2008

சத்தியமார்க்கம் தளத்தின் கட்டுரைப் போட்டி!

சத்தியமார்க்கம்.காம் தமிழின் முதன்மையான இஸ்லாமிய இணையத்தளங்களுள் ஒன்றாகும். வாசகர்களிடையே நல்லதொரு எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கடந்த வருடம் (2007 - 2008) கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பு இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் ஆர்வத்தைப் புலப்படுத்த, இந்த வருடமும் சத்தியமார்க்கம் தளம் கட்டுரைப்போட்டி ஒன்றை ஆக்கப்பூர்வமாக நடத்துகிறது.

இதுபற்றிய முழுவிபரங்களை அறிய : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=988&Itemid=352 . யாரும் பங்குபெறலாம்.

கட்டுரைகள் சென்று சேரவேண்டிய கடைசி நாள்: 31 அக்டோபர் 2008.

நமதூர் எழுத்தாள அன்பர்கள், ஆர்வலர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படி mypno. வலைப்பூ சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு.

சீதக்காதி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ்அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/-பரிசு வழங்கப் பெறும்.

இப்பரிசுக்காக இவ்வாண்டு ‘இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு - தமிழகம்ஒரு சிறப்புப் பார்வை' எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நூல்கள் A4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு 200 பக்கங்களுக்குக்குறையாமல் இருத்தல் வேண்டும். ( இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14செமீ - டெம்மி புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்கவேண்டும்) தாளில் ஒரு புறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப்பெறுதல் வேண்டும்.

தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்துபடிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2009 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்குவந்து சேர வேண்டும்

நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000வழங்கப்படும்.

தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கமுடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையை பழம்பெரும் தமிழ்எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது.

2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்குசதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும்

விவரமான விதிமுறைகளுக்கு எழுதவும்.
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்
சீதக்காதி மணிமாடம்
272 ( 688 ) அண்ணா சாலை
சென்னை 600 006

நன்றி : சமரசம் 16 - 31 ஜுலை 2008 ( பக்கம் 36 )
http://www.samarasam.com/