திங்கள், 1 செப்டம்பர், 2008

என்று தணியும் இந்த ...

முன்சிரிப்பு.. சாரி குறிப்பு : இது ஒரு கற்பனை சிறுகதையே; ( உண்மையாகி விடக்கூடாது...)
பரங்கிப்பேட்டை.
2108 ம் வருடம், ஒரு பிப்ரவரி மாத அதிகாலை பொழுது.
முஹம்மது இபுராஹீம் ஒரு முக்கிய அலுவலாக தலைநகர் சென்னைக்கு அருகிலுள்ள துணைதலைநகரான சென்னை phase III க்கு செல்ல காஜியார் தெருவிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியில் வந்தார்.
புவியீர்ப்பு அணுசரனை வாகனமான "டோட்டோ" அவருக்காக வாசலில் காத்திருக்க அதிலேறி (பழைய) பஞ்சங்குப்பம் அருகில் அமைந்திருந்த "ஏரோஸ்பாட்டுக்கு" வந்து சேர்ந்தார். அங்கே அவருக்காக முன்பதிவு செய்யப்பட்டு காத்திருந்த அரசு ஏரோகிராப்டில் ஏறி அரை மணித்துளியில் துணைதலைநகருக்கு வந்து சேர்ந்தார். நகரில் அவருக்கிருந்த அலுவல்கள முடித்துக்கொண்டு தனது நண்பர் செல்வத்துடன் மீண்டும் மதியம் 2 மணிக்கெல்லாம் பரங்கிப்பேட்டை திரும்பிவிட்டார். வரும் வழியில் ரசாயன கழிவு காடாக மாறி மனிதர்கள் செல்ல அனுமதியற்ற பிரதேசமாக சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் அரசால் அறிவிக்கப்பட்டுவிட்ட "கடலூர் சிப்காட்" பகுதியை தூரத்தில் பார்த்தவாரே வந்தார்.

பரங்கிப்பேட்டைக்கு வந்த பின்னர், பிற்பகல் தனது சென்னை நண்பருக்கு பரங்கிப்பேட்டையை சுற்றி காண்பிக்க கிளம்பினார். கலிமா நகரிலிருந்த பொலிவான ஒரு பள்ளிவாசலை தனது நண்பருக்கு காண்பித்து
"சுமார் 100 வருடம் பழைமையான பள்ளிவாசல் இது." என்றார்.
நெடுந்துயர்ந்த பல கட்டிடங்கள் கொண்ட பரங்கிப்பேட்டையை சுற்றி வந்தவர் உயரமான கட்டிடம் ஒன்றினை சுட்டி
"இதுதான் எங்களின் நகராட்சி " என்றார். பிறகு கொம்மத்பள்ளி தெருவழியாக வந்தவர் ஒரு பாழடைந்த, இடிந்த கட்டிடத்தை சுட்டிகாட்டி "இதுதான் பல நூறு ஆண்டுகள் பழைமையான ஒரு புதிய பள்ளி. மக்கள் யாரும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு பயந்து எதுவும் கேட்காமல் விட்டுவிட்டதால் இன்றுவரை இந்த இறையில்லம் இப்படிதான் இருக்கிறது." என்று வருத்தத்துடன் சொல்லி நகர்ந்தார்.

பிறகு பரங்கிப்பேட்டையின் வியாபார மையமான சஞ்சிவிராயர் கோவில் ஸ்கொயர் பகுதிக்கு வந்தவர், உயர்ந்த வியாபார கட்டிடங்களுக்கு இடையில் நெருக்கியடிக்கும் டிராபிக்கை சீர் செய்ய கட்டப்பட்டிருந்த fly over (மேம்பாலம்) ஏறி கடந்து கெச்சேரி தெருவுக்கு வந்தார். எல்லாபுறமும் உயர்ந்தோங்கி இருந்த கட்டிடங்கள உற்சாகமாய் பார்வையிட்டு வந்தவர், ஒருபுறம் பரிதாபமாக, இடிந்துபோய், பாழடைந்த நிலையில், உபயோகப்படுத்தப்படாமல் கிடந்த கட்டிடத்தை பார்த்தவர், மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் : " இந்த அரசு மருத்துவமனையை என்றுதான் திறப்பார்களோ ...? "

பரங்கிப்பேட்டை to சென்னை எக்ஸ்பிரஸ்


பரங்கிமா நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சேவையில் போக்குவரத்து பணியை தொடர்ந்தது அரசுப்போக்குவரத்து கழகம். இதன்படி இரவு 10 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று ஞாயிறு என்பதால் அதிகமான பயணிகள காண முடிந்தது.


இதுபற்றி இப்பேருந்தின் நடத்துனர் கூறியதாவது : "இப்புதிய பேருந்தின் சேவை சிறப்பாக அமைய இவ்வூர் மக்கள் ஆதரவளித்தால்தான் இதனை எக்ஸ்பிரஸ் சேவையாக தொடர முடியும்." இப்பேருந்து சேவையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.


"இது எங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் எங்களின் மிகப்பெரிய சிரமம் குறைந்துள்ளது." என்கின்றனர் சென்னை கல்லூரிகளில் படிக்கும் பரங்கிப்பேட்டை மாணவர்கள்.

புதன், 27 ஆகஸ்ட், 2008

அபுதாபி PNO Welfare Committee யின் அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் !

வரும் வெள்ளிக்கிழமை (29/08/2008) மாலை 4:30 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பிறகு), நமதூர் நலன் குறித்த கலந்துரையாடலும் அத்துடன் Pno Welfare Committee யின் நிர்வாக தேர்ந்தெடுப்பும் ஏற்பாடு செய்துள்ளோம். அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு நமதூருக்கான தங்களது பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நடைபெரும் இடம்:

அலாவுத்தீன்

வீட்டு எண்: 201ஃபுஜைரா உணவகம் அருகில்,

எல்டோராடோ தியேட்டர் எதிர்புறம்,

எலக்ட்ரா சாலை, அபுதாபி.

தொடர்புக்கு: அபுல் ஹசன்: 050-7723097, 055-7723097

அப்துல் ஹமீது: 050-6898044

உமர்: 0559019721

-- அன்புடன்,
Pno Welfare Committee

தகவல்: சகோ. இப்ராஹிம் சாகுல் ஹமீது (பாஷா)