இன்று டிசம்பர் முதல் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது.எய்டஸ் என்பது கெட்ட பழக்கமுள்ள யாருக்கோ வரும் நோய் என்று மட்டும் நம்பினால் அது மூடநம்பிக்கை. முறையற்ற உடல் தொடர்புகளினால் மட்டும் இந்த நோய் பரவுவதில்லை. சுத்தப்படுத்தப்படாத பிளேடுகள், ஊசிகள், மூலம் கூட இந்த நோய் பரவும்.
இறைவனின் மாபெரும் சோதனைகளில் ஒன்றான, இன்றைய மருத்துவ முறைகளில் தீர்வே இல்லாததாக கருதப்படும் இந்நோய்க்கு ஒரே மருந்து இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில் மனக்கட்டுப்பாட்டுடன் முறையாக வாழ்வதுதான்.
பரங்கிபேட்டையில் இருந்து சுமார் நாற்பத்தி எட்டு (48) பேர், சென்னை கிண்டியில் உள்ள எய்ட்ஸ் நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்காக சென்று வருகிறார்கள் என்று இங்கே உள்ள மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக கூறியதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.
படத்திளுள்ளவரின் விழிகளில் ஏதேனும் தெரிகிறதா?


