செவ்வாய், 23 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

கருணாநிதி சாலையில் மர்ஹும் காதர் சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது காசீம் அவர்களின் மருமகனுமாகிய பாபு என்கிற அப்துல் ரஹீம் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: sky News

ஞாயிறு, 21 நவம்பர், 2010

தொடரும் மழை..!

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்ததில் நீடிப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக நமதூர் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எனினும் நேற்று காலை முதல் லேசான தூறலை தவிர அதிகளவில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 20 நவம்பர், 2010

சிறப்பு மருத்துவ முகாம்







தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.