திங்கள், 27 டிசம்பர், 2010

கண் தானம்

பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த விநோதம் அம்மாள் (97) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே. அமர்சந்த் சர்மா, நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்க நிர்வாகி ஒய். ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் செய்தனர்.

Source: Dinamani

புதன், 22 டிசம்பர், 2010

இறப்புச் செய்தி

ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

வேண்டாமே பிளாஸ்டிக் உணவுப் பொட்டலம்...!











வெளியூர் செல்லும் நமதூர் அன்பர்கள் கவனத்திற்கு...

வெளியூரில் உள்ள சில ஓட்டல் மற்றும் மெஸ்களில் மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரில் உணவை பார்சல் செய்து கொடுக்கின்றனர். வெப்பம் காரணமாக, பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள கெமிக்கல் உணவு பொருட்களில் கலக்கக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு MYPNO அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.