திங்கள், 17 ஜூன், 2013

வாலிபால் கோப்பையை வென்றது புதுவை அணி; பரங்கிப்பேட்டைக்கு 2-வது இடம்! (படங்கள்)








வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து நடத்தி வரும் மாவட்ட அளவிலான கைப்பந்து (வாலிபால்) போட்டிகைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. மொத்தம் 42 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில்  தகுதி சுற்று ஆட்டங்களை தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது.

இதில புதுவை அணி முதல் பரிசு பெற்று கோப்பையை வென்றது. பரங்கிகப்பேட்டை "ஏ" அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது இடத்தை கே.என்.பேட்டை கடலூர் அணியும், நான்காவது இடத்தை கூத்தப்பாக்கம் கடலூர் அணியும், ஐந்தாவது இடத்தை பரங்கிப்பேட்டை "பி" அணியும் பிடித்தது.

இந்த கைப்பந்து போட்டிகளை ஹெச். முஹம்மது இம்ரான், ஏ. தல்பாதர் மற்றும் நண்பர்கள் வாத்தியாப்பள்ளி வாலிபால் கிளப் (VPVC) சார்பில் ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம்-சிங்கப்பூர் பொதுக்குழு கூட்டம்








சிங்கப்பூர்: சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று பகல் சைனா டவுன் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா-வில் நடைபெற்றது. தலைவர் A.R.அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தினை G.M.மரக்கச்சி இறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

செயலாளர் H.முஹம்மது தாரிக் ஹுஸைன்,  பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் கோரிக்கையான புதிய ஆம்புலன்ஸ், ஜக்காத், குர் ஆன் மக்தபா - ஃபித்ரா, புதிய நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து, அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். பொருளாளர் M.G.கமாலுத்தீன் நிதி - நிலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் , புதியதாக பொறுப்பேற்றிருக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர், செயல் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த மாதம் இறுதியில் இறைவனின் அழைப்பினை ஏற்று காலமான சிங்கப்பூர் அமைப்பின் உறுப்பினர் D.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு சப்ர் என்னும் அழகிய பொறுமையை தந்தருளவும், மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறக்கவும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

கூட்ட இறுதியில் தலைவர் A.R.அப்துல் கரீம் நன்றி கூறினார்.

படங்கள்: அண்ணன் மற்றும் MGK




வெள்ளி, 14 ஜூன், 2013

வாத்தியாப்பள்ளியில் முதல் ஜும்ஆ தொழுகை (படங்கள்)

பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான  "செய்யது அலீ பள்ளி என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்"  கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  முதல் ஜும்ஆ பேருரையினை மவ்லவி எம்.ஹெச்.கபீர் அஹமது மதனி நிகழ்த்தினார். இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.











செய்தியாளர் ஸன் அலி உதவியுடன்