வியாழன், 5 பிப்ரவரி, 2009

துண்டு பிரசுரங்களுக்கு அனுமதி!


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தேர்தலில் போட்டியிடுபவர்கள், வாக்கு சேகரிப்பதற்கு மற்றும் பிரச்சாரம் செய்வதற்கு துண்டு பிரசுரங்களை வெளியிடக்கூடாது என்று தேர்தல் குழு நிபந்தனை விதித்தது. ஆனால் இதை எதிர்த்து டாக்டர் நூர் முஹம்மது தேர்தல் குழுவிடம் முறையிட்டு, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் நீதிமன்றத்தில் சந்திப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இதை பரிசீலனை செய்த தேர்தல் குழு, வேட்பாளர்கள் தங்களை பற்றிய சுய பிரச்சாரம் செய்வதற்கு துண்டு பிரசுரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து, இன்று இதை அறிவித்துள்ளது.

புதன், 4 பிப்ரவரி, 2009

ஜமாஅத் தேர்தல் அப்டேட்

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாளின் இறுதி வரை ஜனாப். முஹம்மது யூனுஸ், ஜனாப். டாக்டர் நூற் முஹம்மது, மற்றும் ஜனாப். கா.மு.கவுஸ் ஆகிய மூன்று நபர்கள் மட்டும் வேட்ப்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நாளை இவர்களது வேட்பு மனு தேர்தல் குழுவினரால் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவினை வாபஸ் பெற கடைசி நாள் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணி.

ஹர்த்தால்- கடையடைப்பு

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையில் அப்பாவி தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை கண்டித்து இன்று நடைபெற்ற ஹர்த்தால்- கடையடைப்பு பரங்கிபேட்டையில் உண்மையாக எடுபட்டது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் இயங்கினாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. வழக்கம் போல மருந்தகங்கள் திறந்திருந்தன.

முழுமையான செய்திக்கு (படங்களுடன்) .... இங்கு சொடுக்கவும்
.