இந்தத் தொகுதியில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் (சதவீதத்தில்):
- குன்னம்- 82
- அரியலூர்- 65
- ஜெயங்கொண்டம்- 76
- புவனகிரி- 77
- சிதம்பரம்- 71
- காட்டுமன்னார்கோவில்- 74.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருமானூரில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, உடனடியாகச் சரிசெய்யப்பட்டன.
பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.
வாக்காளர் கணக்கெடுப்பின் போது வீட்டில் இல்லாததால் பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு நிறுத்தம்:
சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 101- எண் வாக்குச் சாவடியில் 98 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவர்களும் வாக்களிக்க வேண்டும் அதுவரை வாக்குப்பதிவை நிறுத்துமாறு அலுவர்களுடன் பூத் ஏஜெண்ட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காலை 7.10 மணி முதல் 7.40 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மேலும் வாக்குச் சாவடியிலிருந்து அனைத்து பூத் ஏஜெண்டுகளும் வெளியேறினர்.தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த வாக்குச் சாவடிக்கு சென்று பூத் ஏஜெண்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதுபோன்று புதுச்சத்திரம் வில்லியநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர் வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டையுடன் வந்த வாக்காளர்கள் பெயர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டு இருந்ததால் வாக்களிக்காமல் திரும்பினர். மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் மேற்பார்வையாளர் உமேஷ்குமார்கோயல் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக