வியாழன், 14 மே, 2009

+ 2 தேர்வு முடிவுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் 9 மணிக்கு என்று சொல்லப்பட்டு வழக்கம் போல அரை மணி நேர தாமதத்துடன் வெளியாகியது.
பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேல்நிலை பள்ளி 100 சதவிகித பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விபரங்கள் விரைவில்.
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி 76 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதன் தலைமை ஆசிரியர் திரு ராகவன் அவர்கள் இந்த செய்தியை பெருமையுடன் அறிவித்தார். பள்ளி முதல் இடத்தை வழக்கம் போல ஹபீபா ஜுலைகா அவர்கள் 1079 மதிப்பெண்கள் எடுத்து தக்க வைத்துள்ளார். அரசு பெண்கள் பள்ளியில் 1000 மதிப்பென்களுக்கு (80% ) மேல் பெற்ற மாணவிகள் மொத்தம் 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக சரண்யா (1056) கதீஜா (1038) ஆகியோர் இருக்கின்றனர்.

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி சற்றே குறைந்த 57% பள்ளி தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளது. முதலிடம் பெற்றவர்கள் குறித்து விபரங்கள் விரைவில்...
கலிமா மேல்நிலை பள்ளி 83% பள்ளி தேர்ச்சி சதவிகிதம் (29 பேர் தெர்வெழுதியதில் 24 பேர் தேர்ச்சி). முதல் இடத்தை வழக்கம் போல (இங்கு வழக்கம் போல என்று குறிப்பிடப்படுவது பத்தாம் வகுப்பு பொதுதேர்விலும் பள்ளி முதல் இடத்தை பிடித்த சாதனை மாணவிகள் என்பதை பெருமையுடன் குறிப்பிடுவதற்காக) உம்முல் யாஸ்மின் அவர்கள் 1073 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார். அடுத்த நிலைகளில் முறையே நூர் அஜீஜுன்னிசா (1026) அப்துர் ரஹ்மான் (1024) ஆகியோர் பெற்றுள்ளனர்.
முனா ஆஸ்திரேலியன் பள்ளி 33 சதவிகிதம் பெற்றுள்ளது.

1 கருத்து:

  1. சேவா மந்திர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.தேவி புவியியல் பாடத்தில் 196 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாமிடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...