
புதன், 2 மார்ச், 2011
மொபைல் போன் டவரில் பேட்டரி திருட்டு
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பகுதியில் மொபைல் போன் டவரில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகளை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள வோடோபோன் மொபைல் போன் டவர்களில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 பேட்டரிகள் திருட்டு போயின.
இது குறித்து வோடோபோன் நிறுவன திட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சிதம்பரம் - கடலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் மூவரும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ராமதுரை (35), பண்ருட்டி மேல்பாதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம் (43), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த மணி (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் திண்டிவனம், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், புவனகிரி பகுதியில் மொபைல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக