
பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொடிமரத் தெரு, ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன், மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தினமும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. திடீர் மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் செய்தி
எங்க தலைவரு ஓட்டு கெட்டு வெலியெ போயி இருக்கும் பொது வந்து மரியல் பன்னி இருக்கு எங்க தலைவரு அங்க இருந்தா எல்லாருக்கும் தன்னீர் புடிச்சி குடுத்து அப்பவே பெரசினய முடிசிருபாரு
பதிலளிநீக்கு