புதன், 29 மே, 2013

இந்திய பன்னாட்டு பள்ளியில் பரங்கிப்பேட்டை மாணவி சாதனை!



ஜெட்டா: +2 பொதுத் தேர்வு முடிவுகளை அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜெத்தாவிட் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 95.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் 3-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் பரங்கிப்பேட்டை மாணவி சபியுன்னிஸா.

பரங்கிப்பேட்டையைச் சார்ந்த மொய்தீன் சாஹிப் மற்றும் கௌஸுன்னிசா தம்பதியின் புதல்வியான சபியுன்னிஸா ஜெத்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சி.பி.எஸ.இ. பாடத்திட்டத்தின் முறையில் நடைப்பெற்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று பள்ளியின் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

மாணவியின் இந்த சாதனை குறித்து சவுதி அரேபிய நாளேடுகளான சவுதி கெஸட் மற்றும் அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 மே, 2013

இறப்புச் செய்தி: பாலு (எ) பாலசுப்ரமணியன்

பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு, ரங்கசாமி செட்டியார்(late) அவர்களின் பேரனும், பக்கிரி செட்டியார்(late)  அவர்களின் மகனும், பொண்ணம்பலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார், சுப்ரமணியம் செட்டியார், ராஜேந்திரன் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோரின் சகோதர்ருமான பாலசுப்ரமணியன்  நேற்று இரவு 1 மணி அளவில் காலமாகிவிட்டார்.

இன்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
தகவல்: மரு. லெ. பூபதி

வெள்ளி, 24 மே, 2013

வாத்தியாப்பள்ளி மஸ்ஜித் திறப்பு விழா

வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூது பந்தர் பரங்கிப்பேட்டை மாநகரில் மஸ்ஜித் என்ற இறையில்ல பள்ளிவாசல்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பழமையான பள்ளிவாசல்கள் புணர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பழமையும், பாரம்பரியமும் மிக்க "செய்யது அலீ என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்" பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிதாக உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாத் முதல் ஞாயிற்றுக்கிழமை (2ந் தேதி) மாலை 5 மணிக்கு திறப்பு விழா காண இருக்கின்றது. ஊரின் முக்கிய பிரமுகர்களும், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 

சிறப்பு விழாவிற்கு முதல் நாள் 1ந் தேதி சனிக்கிழமை பெண்களுக்கு சிறப்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள திறப்பு விழா பிரசுரத்தில் பாணலாம்.



பிரசுரம் உதவி: ஹமீத மரைக்காயர்
படம் உதவி : pno.news


புதன், 22 மே, 2013

மனிதமுக உருவில் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். பரங்கிப்பேட்டையை அடுத்த பு. மடுவங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு. விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு ஒன்று, நேற்று  கடும் சிரமத்துடன் 4 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி உயிருடனு; 3 குட்டிகள் இறந்து; பிறந்தது. இதில் ஒன்றுக்கு மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட ராஜக்கண்ணு அதிர்ச்சியடைந்தார். மனித முக வடிவில் இருந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனும் பரிதாப்பத்துடளும் பார்த்து சென்றனர்.. .தகவலறிந்த கால்நடை மருத்துவ ஆய்வாளர்கள் ஆட்டுக்குட்டியின் உடலை கால்நடைங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.

செவ்வாய், 21 மே, 2013

புதிய ஜமாஅத் தலைவரிடம் நிர்வாகம் ஒப்படைப்பு! புதிய நிர்வாகப் பட்டியல் விரைவில் வெளியீடு!!




பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத் நிர்வாகப் பொறுப்பை  முன்னால் துணைத் தலைவர் எம்.எஸ். அலி அக்பரிடமிருந்து நேற்று முறையாக பெற்றுக் கொண்டார்.  எம்.இ. அஷ்ரஃப் அலி, ஏ. மெஹ்ராஜ் முன்னிலையில் , ஜமாஅத் நிர்வாக கணக்கு, வங்கியிருப்பு, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டார்.

அப்போது, முன்னாள் நிர்வாகிகளான ஓ. முஹம்மது கவுஸ், கலிக்குஜ் ஜமான், ஐ. ஹபீப் முஹம்மது, அப்துல் காதிர் உமரி, சுல்தான் அப்துல் காதர், அன்ஸாரி, ஷாஜஹான், ஹனிபா, காமில் மற்றும் எம். முராது ஆகியோர் உடனிருந்தனர். புதிய தலைவர் ஜமாஅத் பொறுப்பை ஏற்றதையடுத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PUFC



திங்கள், 20 மே, 2013

ஞாயிறு, 19 மே, 2013

MYPNO ஆசிரியருக்கு சான்றிதழ்!

கடந்த மூன்று ஆண்டு காலமாக சவூதி அரேபியா கிழக்கு மாகாண அமைப்பின் தலைவராக பொறுப்பாற்றிய MYPNO.COM ஆசிரியர் S.வஜ்ஹுதீன், அவ்வமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார்








சவூதி அரேபியா கிழக்கு மாகாண அமைப்பின், மாதாந்திர கூட்டம் கடந்த வெள்ளியன்று M.E.கவுஸ் மாலிமார் வசிப்பிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாக பட்டியல் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  MYPNO.COM ஆசிரியரும், கிழக்கு மாகாண அமைப்பின்  தலைவராக கடந்த மூன்று ஆண்டு காலமாக பணியாற்றிய S.வஜ்ஹுதீனுக்கு S.K.காஜா முஹைய்யதீன் அமைப்பின் சார்பாக சான்றிதழ் வழங்கினார்.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டதேர்தல் குழு பல வெளிநாட்டு அமைப்புகளின் மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க தேர்தலை தவிர்த்து தேர்வு குழு மூலம் ஜமாஅத் பொறுப்பாளர்களை நியமித்ததற்கு  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு (PMAUAE) தொடக்கம்!






ஐக்கிய அமீரக வாழ் பரங்கிப்பேட்டை மக்கள், தங்களின் பொதுச்சேவைக்கான பணிகளை ஒருங்கிணைக்க வேண்டி அமைப்பு ஒன்றினை துவக்கிட வேண்டி கலந்தாலேசிப்பதற்காக நடைபெற்ற சிறப்புக்கூட்டம்  துபாய் கரமா பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தினை ஜமால் மரைக்காயர் இறைவசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். பரங்கிப்பேட்டைக்கான அமீரகம் தழுவிய அமைப்பு உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு "அமீரக பரங்கிப் பேட்டை முஸ்லிம் அமைப்பு" (PMAUAE) என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது.

மேலும் இவ்வமைப்புக்கான நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கும் விதமாக ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு  கீழ் கண்ட சகோதரர்களை தேர்வுகுழு உறுபினர்களாக பொதுக்குழுவாக கூடிய அன்பர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

1. ஹுசைனுல்லாபுதீன்
2. செய்யது ஜியாவுதீன்
3. காதர் அலி
4. முஹம்மது உவைஸ்
5. அபுல் ஹசன்
6.  ஜமால் மரைக்காயர்
7. ஷாகுல் ஹமீது (Aramax)
8.  கவிமதி
9. தாஹா மரைக்காயர்
10. இபுராஹிம் ஷாகுல் ஹமீது (பாஷா)
11. முஹம்மது ஹாரூன்  

மேலும் வரும் 24.05.2013 வெள்ளிக் கிழமை மேற்கண்ட தேர்வுக்குழுவினர் கூடி அமைப்பின் சட்ட திட்ட வரைவுகள் குறித்தும், நிவாகிகள் தேர்வு செய்வது குறித்தும் விவாதித்து அவற்றை வருகிற 07.06.2013 வெள்ளி கிழமை அன்று கூட இருக்கிற பொதுக்குழுவில் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டது.

பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளும் அனைத்து சகோதரர்களின் ஆலோசனைகள் படி இவற்றை விவாதித்து புதிய முறையில் அமைப்பின் தலைவர்,செயலளார்,பொருளாளர் மற்றும் இதர நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது

தகவல் & படம்: எம்.கே.கவுஸ்

சிங்கப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மக்கள் சந்திப்பு!






சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை ஜுன்னத்மியான் தெரு மர்ஹும் என்.முஹம்மது கெளஸ் நகுதா, எம்.ஏ.முஹம்மது சாலிஹ் பேரனும், என்.நூருல் அமீன் மகனுமாகிய என்.முஹம்மது சாலிஹ் திருமணம் நேற்று மாலை சிங்கப்பூர் மலபார் பள்ளிவாசலில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் ஏராளமான பரங்கிப்பேட்டை மக்கள் கலந்துக் கொண்டனர்.

படங்கள்: தாரிக் /  கே.ஏ.ஹஸன்

தி.மு.க.வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்!



"சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை துண்டுப் பிரசுரங்களாக திமுக இளைஞரணி சார்பில் அச்சடித்து  பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது. 

பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து.பெருமாள் துவக்கி வைத்தார்.






இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், வேலவன், கோமு, ஆரிபுல்லாஹ், அஜீஸ், கோவிந்தராஜ்  உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக் கொண்டு துண்டு பிரசுரங்களை கச்சேரித் தெரு, கீரைக்காரத்தெரு உள்ளிட்ட நெல்லுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் வழங்கினர்.

சனி, 18 மே, 2013

தயார் நிலையில் வத்தக்கரை மீன் ஏலம் விடும் தளம்


பரங்கிப்பேட்டை வத்தக்கரை அன்னங்கோவில் கடற்கரையில் ரூ.25 கோடி செலவில் மீன் ஏலம் விடும் தளம் உட்பட நவீன வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

கடலூர் மாவட்டம் கடலோர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோர பகுதியான அன்னங்கோவில், முடசல் ஓடை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன் பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம், கிள்ளை, முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் வைத்து மீன்பிடித்து வருகின்றனர். 

ஆனால், பரங்கிப்பேட்டை வெள்ளாற்றிலிருந்து கடலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. வெள்ளாற்றின் முகத்துவாரம் முற்றிலும் மணலால் சூழந்துள்ளது. இதனால் வெள்ளாற்றிலிருந்து கடலுக்கு படகுகள் கொண்டு செல்ல முடியவில்லை. 

இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் வெள்ளாற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அன்னங்கோவில் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன் ஏலம் விடும் தளம், மீன் விற்பனை கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் போன்ற வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, தமிழக அரசு சுனாமி அவசர கால நிதி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி மூலம் சுமார் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக வெள்ளாற்றின் முகத்துவாரத்தை அழப்படுத்தி, அங்கு மணல் முகத்துவாரத்திற்குள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், அன்னங்கோவில் கடற்கரையில் படகு நிறுத்துமிடம், மீன் ஏலம் விடும் கூடம், மீன் உலர வைக்கும் தளம், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த புதிய வசதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்வில் உடன்பாடு!















பரங்கிப்பேட்டை: கடந்த இரு வாரங்களாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை .   தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுப்பதா?தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதா என நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று விடை காணப்பட்டது. கேப்டன் ஹமீத் அப்துல் காதர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்  தலைவராகவும்  எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது .
 
மற்ற நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 11 மே, 2013

கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு!



கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் அமைப்பான QATAR MUSLIM ASSOCIATION OF PORTONOVO(Q-MAP)  சிறப்புக் கூட்டம் செய்யத் ஃபத்தா வசிப்பிடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.   முஹம்மது சிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  புதிய நிர்வாகக் குழுஅமைக்கப்பட்டது

தலைவர்:                 .  முஹம்மது சிராஜுத்தீன்
துணைத் தலைவர்:    செல்ல மரைக்காயர்
செயலாளர்:                  ஹபீப் நூர்
துணைச் செயலாளர்காஜா நஜிமுதீன்
பொருளாளர்:                யாசர் அரஃபாத் 

கூட்டத்தில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கானதேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
தேர்தலை தவிர்த்து தேர்வு கமிட்டி முலம் ஜமாஅத்தின் புதிய தலைவர் மற்றும்நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும் என்றும்தேர்தல் தொடர்பானஅறிவிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள "தேர்தல் கமிட்டியின் "முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தும்தேர்வுக் கமிட்டி எவ்வாறு அமையவேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. 
இறுதியில் துணைச்செயலாளர் காஜா  நஜிமுதீன் நன்றியுரையாற்றிகூட்டத்தை நிறைவு செய்தார்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...