ஆசிரியர் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மே, 2009

கடலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக செயல்பட்டு வருகின்றன.

அவை வருமாறு:-

  1. தூய இருதய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாரதி ரோடு, கடலூர்

  2. சேவா மந்திர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை

  3. அன்னை மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இடைச்செருவாய், திட்டக்குடி

  4. பிஷப் பீட்டர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேவனாம்பட்டினம் கடலூர்

  5. சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

  6. ஜெய விக்னேஷ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழ மூங்கிலடி ,சிதம்பரம்

  7. ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

  8. கீழ மூங்கிலடி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்

  9. லயோலா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணன்குப்பம், குள்ளஞ்சாவடி

  10. டாக்டர் மகாலிங்கம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வடலூர்

  11. நியூ மில்லினியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குமாரப்பேட்டை, கடலூர்

  12. நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மருங்கூர், கீழக்கொல்லை

  13. ஓ.பி.ஆர். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கடலூர்

  14. சந்திர வதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பழஞ்சாநல்லூர்

  15. எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

  16. செந்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியவடவாடி, விருத்தாசலம்

  17. ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழுதூர், திட்டக்குடி

  18. ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி

  19. புனித பால் அன்னை இந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், விருத்தாசலம்

  20. இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பண்ருட்டி

  21. எம்.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெண்ணாடம்

  22. மெர்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்

  23. ஸ்ரீ வெக்காளியம்மன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி

  24. ஸ்ரீ பவானி வித்யாலயா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருவந்திபுரம்

  25. மங்களம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புவனகிரி, சிதம்பரம்

  26. ஸ்ரீ விருத்தாம்பிகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குப்பநத்தம், விருத்தாசலம்

  27. ஜே.எஸ்.ஜே.வி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், செல்லங்குப்பம், கடலூர்

  28. ஸ்ரீ ரங்கா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திட்டக்குடி

  29. டி.வி.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

  30. மூனா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை

  31. விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேப்பளாநத்தம், விருத்தாசலம்

  32. எம்.கே.ராமன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வளையாமாதேவி, சிதம்பரம்

  33. சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேத்தியாத்தோப்பு

  34. ஷைனி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நவலிங்கம் நகர், சிதம்பரம்

  35. செவன் ஹில்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரும்பூர், பண்ருட்டி

  36. ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர், விருத்தாசலம்

  37. மாவட்ட ஆ.க.ம.ப. நிறுவனம், கடலூர்

போன்றவை மட்டுமே அங்கீகாரம் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகும்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 21 மே, 2009

அரசு ஆசிரியர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் புதன்கிழமை கூறியது:

வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயில 50 இடங்கள் உள்ளன.

இதில் பயில விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

விண்ணப்படிவத்தின் விலை ரூ. 500.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.

இயக்குநர், DTERT, சென்னை- 6 என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து, வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூன் 3-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.

செவ்வாய், 19 மே, 2009

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: நாளை முதல் வினியோகம்!

ஆசிரியர் பயிற்சிப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் கூறியிருப்பதாவது:

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள அனைத்து இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் 60 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாகங்கள் சரண் செய்யும் இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படும்.

பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், வரும் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் நாளை முதல், ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள் 250 ரூபாய்க்கும், இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாய்க்கும், 'இயக்குனர், டி.டி.இ.ஆர்.டி., சென்னை-6' என்ற பெயரில் டி.டி., எடுத்துக் கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் 40 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு 21 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டது.

நடப்பாண்டில் புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், கவுன்சிலிங் இடங்கள் மேலும் அதிகரிக்கும்.

புதன், 29 ஏப்ரல், 2009

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை 20க்கு பின் விண்ணப்பம்

ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதிக்குப்பின் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 750 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. 50 சதவீத இடங்கள் கவுன்சிலிங் மூலம் தமிழக அரசு நிரப்புகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்களை, பள்ளி நிர்வாகங்கள் நிரப்புகின்றன.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8 அல்லது 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்குப் பின் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

எனவே, 20ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்கள், ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவு மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த விரும்பவில்லை என, 15க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளன.