செவ்வாய், 5 பிப்ரவரி, 2008

ஊனமுற்றவர்களுக்கு சுயதொழில் செய்ய நிதியுதவி

ஊனமுற்றவர்களுக்கு சுயதொழில் செய்ய நிதியுதவி




பேரூராட்சி சுனாமி அவவர கால திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றவர்களுக்கு சுயதொழில் செய்ய நிதியுதவி வழங்கும் விழா பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் ஊனமுற்ற 10 நபருக்கு தலா 10 ஆயிரம் உதவி தொகையை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் அவர்கள் வழங்கினார்.


இதில் பேரூராட்சி து. தலைவர் செழியன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

லயன்ஸ் கிளப் சார்பாக பரங்கிப்பேட்டையில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கியது.


பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் சார்பில் ஊரின் அனைத்து தெருக்கள்-சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத் நேற்று துவங்கப்பட்டது. இதன்படி 2000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பணிகள் ஆரம்பித்துள்ளது. இதில் பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் அவர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கவுஸ் ஹமீது, முஹமது இப்ராஹிம், அஷ்ரப் அலி, செய்யது ஆரிப், ஹமீது சுல்தான் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

திங்கள், 4 பிப்ரவரி, 2008

எதற்கு இந்த காத்திருப்பு?


இராஜஸ்தான் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்ட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இப்புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் பூட்டிய நிலையிலேயே உள்ளது. அடுத்த மாதம், அடுத்த வாரம் என்றே நாட்கள் ஓடிவிட்ட நிலையில் இதுவரை எந்த புதிய தகவலும் திறப்பு விழா பற்றி கிடைக்கவில்லை. கடைசியாக பேரூராட்சி வட்டாரம் வாயிலாக கிடைத்த தகவலின்படி, ஒரு முக்கிய அமைச்சரின் தேதி கிடைக்காததினால்தான் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, விரைவில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அந்த முக்கிய அமைச்சர் வர இருக்கிறார்கள், அதற்காக முழு மூச்சுடன் பேரூராட்சி தலைவர் செயல்நிலையில் இருப்பதாகவும் அறியப்பட்டது.
புதிய மருத்துவமனை திறக்கப்படவுள்ள இந்நிலையில், மருத்துவமனைக்கு வேண்டிய போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேர மருத்துவர் ஒருவரை உடனே பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.