திங்கள், 30 ஜூன், 2008

மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள், இலவச சீருடைகள்-நோட்டு புத்தகங்கள் வழங்கி சாதனை.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் மாணவ-மாணவியருக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நேற்று (29-06-2008) சந்தைதோப்பு அருகில் இருக்கும் எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழா நடைபெற்றது. ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் லி.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார். இவ்விழாவில் சுமார் 130 மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 750 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீறுடை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்சி மைய்ய இயக்குநர் பாரசுப்ரமணியன், முன்னால் துணை கல்வி இயக்குநர் உபைதுல்லா சாஹிப் மற்றும் பேராசிரியர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

சனி, 28 ஜூன், 2008

உயர்கல்வியை நோக்கி பயணியுங்கள்.

நம் சமுதாயம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டுமென்றால் உயர்கல்வியை கற்றால் மட்டுமே சாத்தியம் என்று நேற்று (27-06-2008) பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே. (TNTJ) மர்கஸ் ஜூம்ஆ குத்பாவில் உரை நிகழ்த்தினார் அதன் மாணவரணி தலைவர் சித்தீக் அவர்கள்.

பொதுவாகவே, ஜூம்ஆ பேருரைகளில் இதுபோன்று சமுதாயத்திற்கு அவசியமான பேச்சுகளை கேட்பதென்பது சாத்தியமற்று போயிருக்கும் நிலையில் சித்தீக் அவர்களின் உயர்கல்வி குறித்த உரை அங்கு வந்திருந்த மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடேயே மிகுந்த வரவேற்பேற்பைப் பெற்றது.

ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு ஏழைப் பெண்களுக்கு இலவல தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதனை பெண்கள் சார்பர்க கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

வியாழன், 26 ஜூன், 2008

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலைபேசி ஓயர்கள் திருட்டு: 2 பேர் கைது

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலை பேசி ஒயர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பி.எஸ். என்.எல். தொலை பேசி நிலையத்தில் ஏராளமான தொலை பேசி காப்பர் ஒயர்கள் திருடு போய் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குமர கோவில் தெருவை சேர்ந்த செல்லையா (வயது 40) என்பவர் தொலைபேசி நிலை யத்திற்குள் புகுந்து ஒயர் களை திருடினார்.

இதனை அங்கு காவ லாளியாக இருந்த மகிழ்நாதன் பார்த்து கையும், களவுமாக அவரைÛ பிடித்தார். பின்னர் செல்லையா போலீசில் ஒப்படைக் கப்பட்டார். இது பற்றி உதவி பொறியாளர் முகமது உஸ்மான் பரங்கிப்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம பாண்டியன் வழக்குப்பதிவு செய்து செல்லையாவிடம் விசாரணை செய்தார்.

விசாரணையில், செல்லையா 200 கிலோ தொலைபேசி ஒயர்களை திருடி ,அதை சிதம்பரத்தில் உள்ள இரும்பு கடைக்காரர் சையது மூசாவிடம் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீசார் செல் லையா, சையது மூசா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒயர்கள் கைப்பற்றப் பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.