திங்கள், 13 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டை - 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: தினமணி

பகுஜன் சமாஜ் கட்சி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறது

பகுஜன் சமாஜ் கட்சி 11 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.

லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கடந்த 3ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இரண்டாம் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விழுப்புரத்தில் நேற்று நடந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் விஜயன் வெளியிட்டார்.

தொகுதி வாரியாக வேட்பாளர் விவரம் வருமாறு:

  • கிருஷ்ணகிரி-மூர்த்தி,
  • சிதம்பரம் (தனி)-ராமலிங்கம்,
  • நீலகிரி (தனி) -கிருஷ்ணன்,
  • காஞ்சிபுரம் (தனி) - உத்ராபதி,
  • திருவண்ணாமலை - கோவிந்தசாமி,
  • விழுப்புரம் (தனி) - பொய்யாது (எ) அன்பின் பொய்யாமொழி,
  • நாமக்கல் - ஹரிகரசிவம்,
  • ஈரோடு - சிவகுமாரி,
  • திருப்பூர் - பாலகிருஷ்ணன்,
  • கடலூர் - ஆரோக்கியதாஸ்,
  • தஞ்சாவூர் - டாக்டர் சரவணன்.

பின் நடந்தக் கூட்டத்தில், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர்களை மாநில பொதுச் செயலர் விஜயன் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்' என்றார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு; பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு
பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

அருகே சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் மாலை சொந்த ஊருக்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் நின்று பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் நின்று பயணம் செய்த 3 பெண்கள் செல்வி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து அபேஸ் செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டார். உறவினர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் அந்த 3 பெண்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் உஸ்மான், ஏட்டு குணசேகரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே மரியாங்குப்பத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி நிர்மலா (41), மணி மனைவி காமாட்சி (35), ராமச்சந்திரன் மனைவி பிரேமா (45) என்பதும், இவர்கள் அக்காள் - தங்கைகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source : மாலை மலர்