வியாழன், 14 மே, 2009

இந்திய இளைஞர் அறிவியல் கருத்தரங்கம்: மே 15க்குள் முன்பதிவு

சென்னை ஸ்ரீ பெரும்பூதூரில் நடைபெறவுள்ள "இந்திய இளைஞர் அறிவியல் கருத்தரங்கில்' கலந்து கொள்ள மே 15 - ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன.

ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை கருத்தரங்கு நடைபெறும். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, 3வது குறுக்குத்தெரு, தரமணி, சென்னை - 113.
தொலைபேசி: 044 - 2254 1229, 2254 2698

சிதம்பரம் தொகுதியில் 74 சதவீத வாக்குப்பதிவு!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.

தேர்தலில் மொத்தம் 74.1 சத வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதியில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் (சதவீதத்தில்):

  • குன்னம்- 82

  • அரியலூர்- 65

  • ஜெயங்கொண்டம்- 76

  • புவனகிரி- 77

  • சிதம்பரம்- 71

  • காட்டுமன்னார்கோவில்- 74.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருமானூரில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, உடனடியாகச் சரிசெய்யப்பட்டன.

பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.

வாக்காளர் கணக்கெடுப்பின் போது வீட்டில் இல்லாததால் பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு நிறுத்தம்:

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 101- எண் வாக்குச் சாவடியில் 98 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களும் வாக்களிக்க வேண்டும் அதுவரை வாக்குப்பதிவை நிறுத்துமாறு அலுவர்களுடன் பூத் ஏஜெண்ட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காலை 7.10 மணி முதல் 7.40 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மேலும் வாக்குச் சாவடியிலிருந்து அனைத்து பூத் ஏஜெண்டுகளும் வெளியேறினர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த வாக்குச் சாவடிக்கு சென்று பூத் ஏஜெண்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

இதுபோன்று புதுச்சத்திரம் வில்லியநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர் வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டையுடன் வந்த வாக்காளர்கள் பெயர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டு இருந்ததால் வாக்களிக்காமல் திரும்பினர்.

மேற்கண்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் மேற்பார்வையாளர் உமேஷ்குமார்கோயல் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் இலவச ஆலோசனை!

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் இலவசமாக ஆலோசனை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் ஆப்பிள் ஜி வெப் டெக்னாலஜி நிறுவனம் உளவியல் நிபுணர்களின் ஆலோசனையையும் வழங்குகிறது.

இது தொடர்பாக நிறுவனத்தின் இயக்குநர் இளங்குமரன் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின்றன.

தேர்வு முடிவுகளை நிறுவனத்தின் இணையதளத்திலும் பார்க்கலாம்.

இப்போது தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களிலும் இத்தகைய நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்கும் நோக்கில் டிஆர்இஏஎம்எச் அறக்கட்டளையின் உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் அதே நேரத்தில் உளவியல் நிபுணர்களின் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உளவியலாளர்கள் மனோஜ், நாகராஜன், சுதாகரன், கவிதா தர்மராஜ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

செல்போன் எண்கள்: 9444112608, 9444204399, 9444266843, 9840244405. 044-22532176.

இணையதள முகவரி: www. worldcolleges.info