வெள்ளி, 31 டிசம்பர், 2010
மருத்துவர்கள் தேவை
திங்கள், 27 டிசம்பர், 2010
ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு...
ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் அறிவித்து உள்ளார்.மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது. 1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Source: Dinamani
கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க F.M. ரேடியோ
சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க, புதிய எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை தொடங்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை (26.12.2010) செய்தியாளர்களிடம் கூறியது:
சுனாமி துயர சம்பவம் இனி நடக்கக் கூடாது. சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய மாநில அரசுகள் சார்பில் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,090 வீடுகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
ராஜீவ்காந்தி சுனாமி நிவாரணத் திட்டத்தில் 1,589 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கடற்கரையில் 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தூரத்துக்குள் குடியிருப்போருக்கு வீடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில், 351 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் சிறப்புத் திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இதுவரை ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
சுனாமியில் பெற்றோரை இழந்த 52 குழந்தைகள், கடலூர் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இலவசக் கல்வி, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தகவல்களை தெரிவிக்க தற்போது வயர்லஸ் கருவிகள், கட்டணமில்லா தொலைபேசி வசதி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் பல நேரங்களில் மின்சாரம் துண்டிப்பால் கருவிகள் இயங்காத நிலையும் உள்ளது. எனவே தனி எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டவர் நெய்வேலியில் நிறுவப்படும் என்றார் ஆட்சியர்.
Source: Dinamani
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
