வெள்ளி, 28 மார்ச், 2008
இறப்புச் செய்தி
ஜெயின் பாவா தைக்கால் தெரு மர்ஹூம் சையத் அவர்களின் மகனாரும் ஹசன் ஜஃபருல்லா தகப்பனாருமாகிய எஸ்.எம்.அப்துல் ஹமீது அவர்கள் மர்ஹூமாகிவிட்டார்கள்.
வியாழன், 27 மார்ச், 2008
அபாய நிலையில் பாலம்


என்றும் மாறாத உண்மைகள் வரிசையில் நீங்கா இடம் பெற்றிருப்பது பரங்கிப்பேட்டை பி.முட்லூர் மோசமான நெடுஞ்சாலை. பரங்கிப்பேட்டை அனைத்து அமைப்புகளும், ஏன் பேரூராட்சி நிர்வாகமே தலைகீழாய் நின்று முயன்றும் முடியாத கனவாகவே இது உள்ளது. சென்ற நவம்பரில் ஜமாஅத் சார்பாக நடந்த ஈத்மிலன் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் இன்னும் 3 மாதங்களில் முழு அளவிலான தரமான சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தும் இன்னும் முடியாதது பரங்கிப்பேட்டை பொதுமக்களுக்கு வியப்பையும், அயர்ச்சியையும் தருகிறது. இந்நிலையில் இந்நெடுஞ்சாலையில் அகரம் ரயில்வே கேட்டை தாண்டி வரும் சிறிய பாலம் ஒன்று கடந்த சில வாரங்கள் பெய்த திடீர் பெருமழையில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பாலத்தின் இருபுறமும் சுவர் மற்றும் அடிவாரங்களும் இடிந்தும் பெயர்ந்தும் அவ்வழியே செல்பவர்கள பயத்துடனேயே பாலத்தை கடக்க செய்கின்றன. பாலத்தின் அடியில் இரும்பு முட்டுகொடுத்தலும், பாலத்தின் இருபுறமும் சிவப்பு கொடிகள் நட்டபட்டுள்ளது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. சபிக்கப்பட்ட இந்த சாலை தொடர் விஷயத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினர் காட்டி வரும் பிரசித்திபெற்ற நீண்ட அலட்சியம் இந்த பாலம் உடைந்தால் தான் உடையுமா? என்பது பொதுமக்கள் அச்சம் கலந்த கேள்வியாக உள்ளது.திங்கள், 24 மார்ச், 2008
மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு

பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...