சனி, 15 நவம்பர், 2008

மரம்வெட்டும் தொழிலாளி பலி

பரங்கிப்பேட்டை அகரம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் தங்கராசு (வயது நாற்பது) இவர் மரம்வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று ஊரில் உள்ள பனைமரம் ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தார். மரத்தை வெட்டியதும் அதை 2ஆக உடைத்தார். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதையடுத்து இரும்பு ஆப்பைவைத்து பெரிய சுத்தியலால் தங்கரசு அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக ஆப்பு விலகி தங்கராசு தொடையில் விழுந்து. உடன் தங்கராசுவின் தொடையில் உள்ள நரம்பு துண்டானது. இதில் ரத்தம் முழுவதும் வெளியேறியது. அதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே தங்கராசு பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவத்தால் அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது.

எதிர்பாராமல் உயிரிழந்த சகோதரின் இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு வலைப்பூ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

வியாழன், 13 நவம்பர், 2008

டிஎன்பிஎஸ்சி -தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு

காலியாக உள்ள 1291 அரசுப் பணியாளர்களை நியமிக்க எழுத்து தேர்வு -
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் (124), கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் (100), உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் உள்தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர் (151), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (128), மாவட்ட வருவாய்த் துறை உதவியாளர் (637) என்று 16 பிரிவுகளில் 1,291 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1,213 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு உண்டு. மற்ற பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வில் பங்கேற்க ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்குள், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த ஆண்டு மார்ச் 22ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் 236 அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதற்கான கட்டணம் ரூ.30. தேர்வு கட்டணம் ரூ.100. விண்ணப்பம் கிடைக்கும் அஞ்சலகங்கள் மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.

தகவலுக்கு நன்றி : இறைநேசன்
பரங்கிப்பேட்டை.

கல்விக்குழு செய்தி

கல்விக்குழு சார்பில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் (டியுஷன்) நடத்தப்பட்டு வருகின்றது. இதில் அவ்வப்போது மாற்று திறன் போட்டிகள் நடைபெறும். ஒரு மாதம் முன்பு நடைபெற்ற வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேற்று மாலை டியுஷன் வளாகத்தில் (மஹ்மூதியாஓரியண்டல் பள்ளி) பரிசு வழங்கப்பட்டது.