வெள்ளி, 17 ஏப்ரல், 2009

மெய்ப்பட்டு வரும் கனவு

வெள்ளாற்றுக்கு குறுக்கே பாலம் சமைக்கும் பரங்கிமா நகரின் பெருமக்களின் மிக நீண்ட கால கனவு மெய்படப்போகும் காட்சி இதோ. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கொஞ்சம் விரைவாகவே நடைபெற்று வருகின்றன பால கட்டுமான பணிகள்.
வெள்ளாற்றைமுற்றிலுமாக தடுத்து மண் பாலம் கட்டப்பட்டு அதில் ஆங்காங்கே பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் நடந்தே அக்கரை வரை சென்றதை முதலில் நம்பவே முடியவில்லை. ஏராளமான வெளி மாநில வேலையாட்க்களும், பிரம்மாண்டமான இயந்திரங்களும், அவைகளின் அசத்தலான இயக்கமும் அங்கு வரும் சிறு பிள்ளைகளை விழி விரிய காண வைக்கின்றன.
நமதூர் பக்கமிருந்து தான் கட்டுமான பொருட்க்கள் வரவேண்டும் என்பதனால் அக்கரை பக்கம் முதலில் பில்லர் போடப்பட்டு வருகிறது. அவை போடப்பட்டு முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் போக்கு திறந்து விடப்படும். முழு கட்டுமானப்பணியும் முடிவடைய இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று அங்கு இருந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஹ்ம்ம்ம்ம் பார்க்கலாம்.

இந்த தற்காலிக மண் பாலத்தையும் அதன் மேல் வெகு மும்முரமாக இரவும் பகலும் நடைபெரும் வேலைகளையும் "பார்வையிட" திருவாளர் பரங்கிப்பேட்டை பொது ஜனம் குறிப்பாக தாய்மார்கள் தினமும் வருகை புரிவது வாடிக்கையாகிவிட்டது.
a


இப்போதும் தோணியில் வந்து இறங்கும் மக்களை காணும் போது, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் என்று தோன்றியது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

அரபி மொழி கற்க ஓர் அரிய வாய்ப்பு..!

முற்றிலும் இலவசம்!!!
அரபி மொழி கற்க ஓர் அரிய வாய்ப்பு..!
  • ஏப்ரல் 14 முதல் மே 31 வரை நாற்பது நாள்களில் அரபி மொழியில் சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • சென்னை அண்ணாசாலையில் உள்ள மதரஸே ஆஜம் பள்ளிவாசலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

  • 2 தேநீர், நண்பகல் உணவு, சிறு ஓய்வு.

  • குர்ஆனையும், நபிமொழி நூல்களையும் அரபியில் தாமே படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முறையான பயிற்சிகள்.

  • ஆர்வமுள்ளவர்கள் உடன் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

  • விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 9841870710 – (044) 65151001


Source: சமரசம்

பரங்கிப்பேட்டையில் பாம்புடன் பூனை சண்டை: போலீசார் ஓட்டம்

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நல்ல பாம்புடன் பூனை சண்டை போட்டதை பார்த்த போலீசார் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் வாடகை ஓட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அவ்வப்போது பூனை, பாம்பு சகஜமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்து செல்லும்.

நேற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எழுத்தர் அறை அருகே திடீரென நல்ல பாம்பு ஒன்றுடன், பூனை சண்டை போட்டு கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு எட்டி பார்த்தபோது, பாம்பு தலையை தூக்கியவாறு நின்று கொண்டிருந்ததை கண்டு போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து பரங்கிப்பேட்டையில் இருந்து இருளரை வர வழைத்து பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர்.

அதன்பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.