செவ்வாய், 5 மே, 2009

வெள்ளாற்றுப் பாலம்




கல்வி, குடும்பவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் மிக்க சிரமத்தை கண்டு வந்த பரங்கி மாநகர மக்களுக்கு ஓர் மைல் கல்லாக இந்த பாலம் அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாத ஒன்றாகும்.

நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் மைல் ஊரை சுற்றி வரவேண்டிய கட்டாயம் என இருந்தமைக்கு இது ஓர் மைல் கல்லாக தான் இருக்கிறது என்பதற்கு மறுப்பதற்கு இல்லை.

வெளிநாடுகளுக்கு சென்றால் தான் தமது இல்லத்தில் அடுப்பு எறியும் என்ற நிலை இன்ஷா அல்லாஹ் இந்த பாலத்தின் பரிபூரணம் சிதம்பரம் நகரத்தை சமீபமாக்கியதால் வெளிநாடுகளுக்கு தங்களது பிள்ளைகளும், கணவன்மார்களும் சென்றால் தான் உணவு என்ற நிலை மாறி நாமும் நமது குடும்பத்தாருடன் இனைந்து உள்ளுரிலேயே தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை பரங்கி மாநகர மக்களுக்கு ஏற்பட தான் செய்துள்ளது.

அல்லாஹ் விரைவில் நிறைவு பெற அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்!!

திங்கள், 4 மே, 2009

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் (டி.ஆர்.டி.ஓ / DRDO).

டி.ஆர்.டி.ஒ., நமது பாதுகாப்பு குறித்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனம்.

இதன் மையங்கள் நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன.

இதில் காலியாகவுள்ள பின்வரும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் பி

காலியிடங்கள்:மொத்தம் 220.

பிரிவு வாரியாக காலியிடங்கள்:

  • எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் - 80
  • மெக்கானிக்கல் - 60
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் - 40
  • கெமிக்கல் - 20
  • எலக்ட்ரிகல் - 20

தகுதிகள்:

  • குறைந்தது 60 சதவீதத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

  • ஜூன் 5, 2009 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிகளுக்காக 3 மணிநேர தேர்வு ஒன்று டி.ஆர்.டி.ஓ.,வினால் நடத்தப்படும்.
  • இதில் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
  • இதில் உங்களது இன்ஜினியரிங் பிரிவிலிருந்து திறனைப் பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும்.
  • 2வது தாளில் அப்ளைட் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் தொடர்பான கேள்விகள் இடம் பெறும்.
  • இதிலும் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
  • மொத்தம் 50 கேள்விகள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • முழு விபரங்களடங்கிய ஏடு மற்றும் விண்ணப்பத்தை ரூ.300 பணமாகச் செலுத்தி ஸ்டேட் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் பெறலாம்.
  • நிரப்பிய விண்ணப்பத்தை தேவைப்படும் இணைப்புகளோடு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி

  • The Director,
  • Recruitment & Assessment Centre,
  • Lucknow Road,
  • Timarpur,
  • Delhi – 110054.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூன் 5, 2009.

போட்டித் தேர்வு நாள்: செப்டம்பர் 6, 2009.

முழு விபரங்களையும் படிவத்தையும் டவுண்லோட் செய்து கொள்ளும் இணைய தள முகவரி: http://rac.drdo.in/

ஞாயிறு, 3 மே, 2009

கல்வி குறித்த செய்திகள்

தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அட்மிசன் அறிவிப்பு

  • தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • லெதர் பிராசஸிங் பிரிவில் முதுநிலை டிப்ளமோவும், லெதர் பிராசஸிங், லெதர் கூட்ஸ், லெதர் கார்மென்ட்ஸ், புட்வேர் ஆகிய பிரிவில் டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகிறது.

  • டிப்ளமோ படிப்பிற்கு வேதியியலை ஒரு பாடமாகக் கொண்ட பி.எஸ்சி., படிப்பும், டிப்ளமோ படிப்புகளுக்கு பிளஸ் 2 பாடத்தில் 50 சதவீத தேர்ச்சியும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், கான்பூர், ஜலந்தர் ஆகிய இடங்களில் இதற்கான மையங்கள் உள்ளன.

  • ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஜூன் 13ம் தேதி நடைபெற உள்ளது.

  • இப்படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை முதல் தேதி துவங்குகிறது.

  • விபரங்களுக்கு: http://www.clri.org/

ஆங்கில பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை

  • ஹைதராபாத்தில் உள்ள தி இங்கிலிஷ் அண்ட் பாரின் லேங்க்வேஜ்ஸ் பல்கலைக்கழகத்தில் 2009-10ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இப்பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி., ஆகிய ஆராய்ச்சி படிப்புகளும், ஆங்கிலம் கற்பிப்பதலில் முதுநிலை டிப்ளமோ, முதுநிலை சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

  • மேலும் விவரங்களுக்கு: http://www.efluniversity.ac.in/

இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு படிப்புகளில் சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • இக்னோ பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

  • இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • எனவே, ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள் தாமத கட்டணம் ரூ.200 செலுத்தத் தேவையில்லை.

  • விண்ணப்பத்தை ரூ.100 செலுத்தி நேரில் பெறலாம்.

  • www.ignou.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • விவரங்களுக்கு 044-22541919, 22542727 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.