செவ்வாய், 25 நவம்பர், 2008

வரலாறு காணாத மழை




ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.



ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


தகவல்: R.தவ்ஹீத்

4 கருத்துகள்:

  1. Assalamu 'alaikum,

    Inna lillahi wa inna ilaihi raajioon.

    May Allah's help be with the people affected. Amin

    Jazakamullahu khairan to all those who helped our poor brothers and sisters in islam.

    Those who are able to help, please help our brothers and sisters in islam.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. பாதிக்கப்படுபவர்களின் துயர்துடைக்க அனைவரும் ஒன்றுபடுவோமாக.

    கடந்த இரண்டு நாளுக்கு முன் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிக அளவாக பரங்கிப்பேட்டையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இரட்டை கிணறு தெருவில் பலத்த மழையின் காரணமாக விழுந்த மரம் இன்று காலை அகற்றப்பட்டது. மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளித்துள்ளது

    இங்கேபடிச்சேன்

    பதிலளிநீக்கு
  4. //ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது//

    மன்னிக்கவும். இன்று மாலை 6.45 மணிக்கு நானும் மற்றொரு நண்பரும் ஷாதி மஹாலுக்கு சென்று பார்த்த போது அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் இல்லை. ஜமாஅத் மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சென்று அழைத்தும், பாதிக்கப்பட்ட மக்கள் வர மறுத்து விட்டதாகவும், ஒரு குடும்பம் மட்டுமே வந்தது, அவர்களும் திரும்ப சென்று விட்டார்கள் என்றும் தகவல் கிடைத்தது.

    இரவு உணவு ஜமாஅத் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே கூடுதல் தகவல்.

    அன்புடன்
    ஹம்துன் அப்பாஸ்
    பரங்கிப்பேட்டை.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...