ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

தேர்தல் துளிகள்

  • மொத்த வாக்குகள் பதிவானவை: 1966 (59%)
  • இன்று காலை மிகச்சரியாக 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கியது.
  • நீண்ட-நெடிய (3) வரிசைகளில் வாக்காளர்கள் தமது வாக்குபதிவினை செலுத்தினர்.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பான முறையில் காவல் துறை பணியாற்றியது.
  • அரசு அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் களத் தொண்டர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர்.
  • பூத் ஏஜெண்ட், மீடியா, வேட்பாளர்கள், இதர முக்கிய அதிகாரிகள், காவல் துறையினர் தவிர வேறு யாருக்கும் களத்தில் நிற்க அனுமதி தரப்படவில்லை.
  • தங்களால் இயலாவிட்டாலும் ஊரின் நலன் கருதி வயதானவர்கள் முதல் ஊனமுற்றோர்கள் வரை தமது கடமையை நிறைவேற்றினர்.
  • இடையிடையே சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் களையப்பட்டன்.
  • வாக்குப்பதிவு நடைபெற்ற ஷாதிமஹாலைச் சுற்றி மக்கள் கூட்டம் அலை மோதியது. இவர்களை அடிக்கடி காவல் துறையினர் கலைப்பதும் பின்பு மக்கள் மீண்டும் கூடுவதும் வா(வே)டிக்கையாக இருந்ததது.
  • வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டையர்களுக்கு வாக்குரிமை இல்லாமலிருந்தும், அவர்கள் அதிகமான ஆர்வம் காட்டினர். அந்ந வகையில் அவர்களில் பலர் நம்மை மட்டுமின்றி களத்திலிருந்த ஏனைய சிலருக்கு போன் செய்து அடிக்கடி தகவல் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக ஹம்துன் அப்பாஸ், ஹாமீம் போன்றோர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வெளிச்சமூட்டிய வெளக்குகள்

    இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...