இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து ‘சிறப்பு அனுமதி’ (தத்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக, இத்துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்ப மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், பிப். 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் லுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1210
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக